நான், விஜயலட்சுமி வர்றோம்..மனைவி கயல்விழி வர ரெடியா? சீமானுக்கு வீரலட்சுமி கேள்வி- அப்புறம் தேன்மொழி?
சென்னை: திருமண மோசடி புகார் விவகாரத்தில் தாமும் நடிகை விஜயலட்சுமியும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஒரு சேர விசாரணைக்கு தயார்; அதேநேரத்தில் சீமான் மனைவி கயல்விழியையும் அழைத்து வர தயாரா? என தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் மீதான திருமண மோசடி புகாரில், நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் சீமான் என்ற புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

சீமான் பதில் நடவடிக்கை: இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். 2 முறை சம்மன் அனுப்பியும் பலனில்லை. தற்போது நடிகை விஜயலட்சுமி அவதூறு பரப்புவதாக கூறி ரூ1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் சீமான்.
வீரலட்சுமி 'வீடியோ': அத்துடன் தற்போது சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோருடன் ஒரு சேர தம்மை விசாரணை செய்ய வேண்டும் என சீமான் புதிய நிபந்தனை விதித்துள்ளார். சீமானின் இந்த நிபந்தனைக்கு வீரலட்சுமி பதில் அளித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: சீமான் அவர்களே! வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2-வது சம்மனுக்கு ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது. மிக்க மகிழ்ச்சி. ஆனால் விஜயலட்சுமியும் வீரலட்சுமியாகிய நானும் சேர்ந்து ஆஜராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள். உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன். நானும் விஜயலட்சுமியுடன் சேர்ந்து விசாரணைக்கு வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை.
கயல்விழி, தேன்மொழி: இந்த வழக்கில் உங்கள் மனைவி கயல்விழி மீதும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். தேன்மொழி என்ற பெண்ணும் விசாரணைக்கு ஆஜராவதாக இருந்தது. நானும் விஜயலட்சுமியும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளோம். இவ்வாறு வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications