என்ன இப்படி இறங்கிட்டாங்க? சீமான் மீது 'பயங்கர' புகாரை உள்துறை செயலரிடம் சொல்லப் போகும் வீரலட்சுமி!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளரிடம் நாளை மறுநாள் புகார் ஒன்றை தெரிவிக்க இருப்பதாக தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி தெரிவித்து மிண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுடன் மோதியவர் வீரலட்சுமி. இதனால் அவருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தொடர் மோதல் நீடித்து வருகிறது. சீமான் மீதான விஜயலட்சுமியின் புகார்களை வரிக்கு வரி செய்தியாளர்கள் கூட்டத்தில் வாசித்து காட்டியதில்தான் நாம் தமிழர் தம்பிகள் வீரலட்சுமி கடும் கோபத்தைக் காட்டினர்.

இதன் பின்னர் வீரலட்சுமி மீது நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்தார். தம்மை சித்ரவதை செய்து கொடுமை செய்தார் வீரலட்சுமி; சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுகிறே என்றார் விஜயலட்சுமி. இந்த பஞ்சாயத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து, வீரலட்சுமி- விஜயலட்சுமி இருவரையும் வறுத்தெடுத்தார். மான நஷ்ட வழக்கு போட இருப்பதையும் எச்சரிக்கையாக விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் கோவிலுக்குப் போன வீரலட்சுமிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பின்னர் வீரலட்சுமியின் கணவர் பூவை கணேசன், சீமானை பாக்ஸிங் போட்டிக்கு அழைத்தார். சீமான் இதனை ஏற்க மறுத்தார்.
உள்துறை செயலாளரிடம் புகார்: தற்போது சீமான் மீது அதிபயங்கர புகார் ஒன்றை கூறியுள்ளார் வீரலட்சுமி. இதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், தமிழ்நாட்டு குடியுரிமை பெற சீமானுக்கு பணம் கொடுத்தோம். ஆர்கே நகர் தொகுதியில் செலவு செய்தோம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை என தெளிவற்ற முறையில் அந்த ஈழத் தமிழர் பேசுவது இடம் பெற்றுள்ளது. இதனையே உள்துறை செயலாளர் அமுதாவிடம் சீமான் மீதான புகாராக தெரிவிக்க இருப்பதாக இன்று வெளியிட்ட வீடியோவில் வீரலட்சுமி தெரிவித்திருக்கிறார்.
இதுதான் புகாராம்: அதாவது ஈழத் தமிழர்களிடம் தமிழ்நாட்டு குடியுரிமை அல்லது இந்திய குடியுரிமை பெற்றுத் தர பணம் பெற்றதாகவும் அதை செய்து தராமல் மோசடி செய்தார் எனவும் சீமான் மீது புகார் தெரிவிக்க இருப்பதாக வீரலட்சுமி கூறியுள்ளார். ஆனால் இது தொடர்பான உரிய ஆதாரங்களை அந்த வீடியோவில் முழுமையாக வீரலட்சுமி வெளியிடவும் இல்லை.












Click it and Unblock the Notifications