விஜயலட்சுமிக்கு செட்டில் செய்த சீமான்! மீசை வெச்ச ஆம்பளையா? சொடக்கு போட்டு சீறிய "ஷத்ரிய" வீரலட்சுமி
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னை தொட்டுப் பார்த்தால் பல நூறு மடங்கு படையை இறக்கிவிடுவேன் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கட்சியாவது ஒன்னாவது வீரலட்சுமியை வெட்டிப் போட்டு போய்கிட்டே இருப்பேன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்குமோ? ஸ்கெட்ச்சையே தூக்க முடியாது உன்னால.. என கடுமையாகத் தாக்கி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பாக வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் சுற்றி வளைத்து தாக்க முய்னறனர். அப்போது செய்தியாளர்களிடம் வீரலட்சுமி கூறியதாவது: பயம் என்பது இந்த வீரலட்சுமியின் சரித்திரத்திலேயே கிடையாது. சீமானுக்கு 61 வயசு. என் அப்பன் ஸ்தானம். என்னை வாடி போடின்னு இழிவு சொல்லால பேசுனால எனக்கு கவலை இல்லை.
எனக்கும் ஒரு கூட்டம்: தமிழ்நாட்டுல எல்லாருக்குமே ஒரு கூட்டம் இருக்கு. என்கிட்ட இருக்கிற கூட்டம் பல நூறு மடங்கு. என் கூட்டத்தை நான் இறக்குனா... நான் வன்முறையில் ஈடுபடலை. நான் வன்முறையில் ஈடுபடக் கூடாதுன்னுதான் பேசிகிட்டு இருக்கேன்.
வன்னியர் குல ஷத்ரிய மகாராணி: என் தாத்தா கதிர்வேல் நாயக்கரும் என் பாட்டி எல்லம்மாளும் என்னை சின்ன வயசுல இருந்தே சொல்லி வளர்த்திருக்காங்க.. நீ வன்னியர் குல ஷத்ரிய குடும்பத்துல பிறந்த மகாராணி. உன் காலில் ஒருத்தன் மிதிச்சான் அவன் தலையை மிதின்னு சொல்லி இருக்காங்க. நான் ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவள். எங்களுக்கு தொழிலே போர் செய்யுறதான். விவசாயம்தான். நாட்டை ஆள்வதுதான் எங்க தொழில்.
அண்ணாசாலை என் மாமனார் நிலம்: சும்மா இந்த பூச்சாண்டி காட்டுவது.. வெட்டி போடுவேன்னு நாலு மைக் முன்னாடி பேசுறது எல்லாம் வேண்டாம்.. நான் நடு ரோட்டுல வந்து நிற்கிறேன். அண்ணாசாலையில் நிற்கிறேன். என் மாமனார் சவுகார்பேட்டை வடிவேலு முதலியார்.. அந்த காலத்துலயே... அவரு நிலத்துல வந்து நான் நிற்கிறேன்.
படையை இறக்குனா.. : என் மீது கை வைக்கும் போது நான் என்ன பூப்பறிச்சுகிட்டா இருப்பேன்? என் தம்பிக சும்மா விட்டுருவாங்களா? நான் யாருன்னு தெரியாம விளையாடுற.. என் பின்னாடி பெரிய பல நூறு மடங்கு படையே இருக்கு.. இறக்கிவிட்டா அவ்வளவுதான்.

செட்டில் செய்த சீமான்: விஜயலட்சுமிக்கு சீமான் செட்டில்மென்ட் செய்துவிட்டார். அந்த விவகாரம் எனக்கு 2 நாட்களுக்கு முன்னரே தெரியும். அதனால்தான் விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றார்.
சொடக்கு போட்டு சவால்: சரியான ஆம்பளை... நாம் தமிழர் கட்சியில எவனாவது ஒரு மீசை வெச்ச ஆம்பளை இருந்தீங்கன்னா நான் நிற்கிறேன்..
என்னை சரிக்கு சரியான ஆம்பளையாகத்தான் சீமான் பார்க்கிறார்... அதனால்தான் அரிவாளால் வெட்டுவேன் என்கிறார்.. நானும் அரிவாள் எடுக்கிறேன். நான் வன்முறையை கையில் எடுக்கவில்லை. எந்த ஆயுதமும் வேண்டாம். தனியாக ஒரு ஆளாக வந்து நிற்கிறேன். ஆம்பளையா இருந்த வந்து வெட்டிப் போட்டுட்டு போக சொல்லுங்க. இவ்வாறு விரல்களில் சொடக்கு போட்டு சவால் விட்டார் வீரலட்சுமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications