நீ என் சித்தி பையன், நான் உன் பெரியம்மா பையன், நம்ம சாப்பாடு பிரியாணிடா.. பாக்.கில் வைரலாகும் சிவா
பாகிஸ்தானில் நடிகர் சிவா நடித்த தமிழ் படம் பட வசனங்கள் வைரலாகி வருகின்றன.
சென்னை: நம்ம ஆட்களுக்கு எந்த நேரத்தில் மீம்ஸ்களை போட்டு கலாய்ப்பது என்றே தெரிவதில்லை. மழை வந்தாலும் சரி, மோடி வந்தாலும் சரி... எல்லாத்துக்குமே மீம்ஸ்கள்தான்!
இப்போது நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையிலும் மீம்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள். குறிப்பாக சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்ப்படம் படத்தின் வசனம் ஒன்று பாகிஸ்தானில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

#SayNoToWar என்ற ஹேஷ்டேக்கில்தான் இந்த பட டயலாக்குகள் பாகிஸ்தானில் ட்ரெண்டாகிறது. இதை ஒரு பாகிஸ்தானி தனது ட்விட்டர் பக்கத்தில் "Pakistanis and Indian are siblings, Biriyani is our Family Food" (பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் உடன்பிறந்த சகோதரர்களை போன்றவர்கள். பிரியாணி நம் குடும்ப உணவு) என்பதை பதிவிட்டு, தமிழ்ப்படம் பாகத்தின் குறிப்பிட்ட ஒரு வசனத்தையும் பதிவிட்டிருந்தார்.
அந்த படத்தின் கதைப்படி இந்தியரான சிவா தனது எதிரி அதாவது பாகிஸ்தான் நாட்டு வாசிம்கானிடம் பேசுவதுபோல டயலாக் உள்ளது.
As always, the South shows the rest of India (and Pakistan) the path to sanity. You're welcome. https://t.co/1rAHs8ID4h
— Abhishek Sundar (@ctrlaltdela) February 28, 2019
சிவா: இந்தியா என் தாய்நாடு... பொன்னாத்தா என் தாய்.. என் தாயைவிட என் தாய்நாடுதான்டா முக்கியம்.. அதை அழிக்கிறதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.
வாசிம்கான்: ஹா..ஹா...ஹா... உனக்குதான்டா இந்தியா தாய்நாடு. நான் பாகிஸ்தான். இந்தியா எனக்கு எதிரி
சிவா: வாசிம்கான்.. இந்தியா உனக்கு எதிரி இல்லை.. இந்தியா உனக்கு பெரியம்மாடா.. நீ இந்தியாவை எதிரியா பாக்கிறே... நான் பாகிஸ்தானை என் தாய்கூட பிறந்த தங்கச்சியா பாக்கறேன்... பிரியாணி நம்ம ஃபேமிலி சாப்பாடுடா.. நீ என் சித்தி பையன்டா.. வீ போத் ஆர் கசின்ஸ்... நான் இவ்வளவு சொல்லியும் குண்டு வெடிக்கணும்னா வெடிக்கட்டும்.. சாவ போறது எல்லாம் உன் பெரியம்மா பசங்கதான்.. சித்தி புள்ளைங்களுக்கு எல்லாம் புத்தி கெட்டுப்போச்சுன்னு நாளைக்கு உன்னைதான்டா சைனாக்காரன் கேவலமா பேசுவான். இது உனக்கு தேவையா? உனக்கு தேவையா வாசிம்?" என்று அந்த டயலாக் ஒலிக்கிறது.
கடைசியில் அந்த பாகிஸ்தான்காரர், மனம் திருந்தி, சிவாவின் காலில் விழுந்து கண்ணீர் சிந்துகிறார். அதாவது நம்ம நாட்டில் மட்டுமில்லை.. பாகிஸ்தானிலும் போர் வேண்டாம் என்று அந்நாட்டு மக்கள் ஆசைப்படுகிறார்கள். அதை வலியுறுத்திதான் இந்த தமிழ் பட சீன் பதிவிடப்பட்டு வைரலாகியும் வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications