சீரியல் நடிகை விஜே சித்ராவின் தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்ட சோகம்
சென்னை: சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 64. தனது மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு இறந்து கிடந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த நிலையில் திடீரென திருவான்மியூர் வீட்டில் தனது மகளின் துப்பட்டாவால் அவருடைய தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற அற்புதமான கேரக்டரில் நடித்து வந்தார். இவர் நிறைய விளம்பரங்களிலும் ஆவணப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏகப்பட்ட ரசிகர்கள்! இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களிலும் ஆக்டிவ்வாக இருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி சித்ரா, பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் ஒரு நட்சத்திர விடுதியில் அவருடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் (இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது) மீது புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. அப்போது நீதிபதி ரேவதி கூறுகையில், சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு எதிரான எந்த ஒரு ஆதாரத்தையும் போலீஸார் சமர்ப்பிக்கவில்லை என்பதால் ஹேம்நாத்தை விடுதலை செய்வதாக அறிவித்தார். இதை எதிர்த்துதான் சித்ராவின் தந்தை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.
சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் காமராஜ். இவர் தனது மகள் இறப்பால் மனதளவிலும் உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். தனது மகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் போராடினார்.
அண்மையில் கூட ஹேமந்த் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் தனது மகளுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா கிடைக்காதா என்ற விரக்தியில் இருந்திருக்கலாம் என தெரிகிறது. இதனால் காமராஜ், தனது மகளின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா இறந்தார். இதனால் அவர்களது குடும்பத்திற்கு 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு என்பது பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருந்தது. தற்போது சித்ராவின் அப்பாவும் டிசம்பர் 31 ஆம் தேதி இந்த 2024 ஆம் ஆண்டின் கடைசி நாளில் இறந்துவிட்டார். இதனால் அவரது குடும்பத்திற்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டும் பெரும் சோகத்தையே கொடுத்திருக்கிறது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications