தமிழச்சி தங்கப்பாண்டியனை டேக் செய்து பொங்கிய நெட்டிசன் .. சென்னையில் ஒரே நாளில் மாறிய காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியனை டேக் செய்து வேங்கைவாசலை சேர்ந்த நெட்டிசன் ஒருவர் கோரிக்கை ஒன்றை வைத்தார். தங்கள் பகுதியில் குப்பைகள் மோசமாக கொட்டப்பட்டுள்ளதாக புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதையடுத்து ஒரே நாளில அங்கு காட்சிகள் மாறி உள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் தென் சென்னை தொகுதி தான் பணக்கார தொகுதி. இங்குள்ள சொத்துக்களின் மதிப்பை கூகுளால் கூட கணக்கு போட முடியாது. மொத்த சென்னையின் பொக்கிசம் என்று சொல்லலாம். தென் சென்னை தொகுதி இன்றைக்கு வானுயுர வளர்ந்துள்ள கட்டிடங்கள், பல ஆயிரம் தொழில் நுட்ப நிறுவனங்கள், மிகப்பெரிய கம்பெனிகள், மெட்ரோ ரயில் ஆகியவை அமைந்துள்ள பகுதியாகும். சுருக்கமாக சொல்வது என்றால், மொத்த சென்னையும் வேலைக்கு வந்து செல்லும் இடமாக தென்சென்னை தான் இருக்கிறது.

chennai omr tamilachi thangapandian

தென் சென்னையில் எல்லா தொகுதிகளிலும் தரமான சாலை வசதி, நல்ல குடிநீர் வசதி என எல்லாமே இருக்கிறது. ஆனால் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தலைகீழ் நிலைமை. இங்குள்ள நிலைமையை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தில் ஆரம்பிக்கும் இந்த சோழிங்கநல்லூர் கடைசியாக சோழிங்கநல்லூர் நகரத்தில் முடியும்.

ஓஎம்ஆர் சாலைகள், இசிஆர் சாலைகள், ரேடியல் ரோடு என இந்த பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்களில் லட்சக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள். ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள இந்த தொகுதியில் அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருப்பதாக புகார்கள் உள்ளது.

பாதாள சாக்கடை பணிகள் காரணமாக சாலைகள் மடிப்பாக்கம் பகுதியில் மிக மோசமான நிலையில் உள்ளன. மடிப்பாக்கத்தில் மழைக்காலத்தில் விபத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் வீடு திரும்பினாலே பெரிய விஷயம் என்கிற நிலையில் தவிப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். அந்த அளவிற்கு எல்லா சாலைகளும் பயணிக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

மடிப்பாக்கம் இப்படி என்றால், பள்ளிக்கரணை பகுதியில் போக்குவரத்து நெரிசல் கண்ணை கட்டும்.. காமாட்சி மருத்துவமனை சிக்கலை கடக்க தவமே இருக்க வேண்டும். சோழிங்கநல்லூர், மேடவாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம், ஓம்ஆர் சாலை, துரைப்பாக்கம், என எல்லா பகுதியில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்ற புகார்கள் உள்ளது. சாலை வசதியும் பல இடங்களில் மோசமாக உள்ளதாக புகார்கள் உள்ளது. மலைக் காலங்களில் நிலைமை மோசமாக இருக்கும் என்றும் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

chennai omr Tamilachi Thangapandian

இந்த சூழலில் வேங்கைவாசல் எல்லை முடிவில் சித்தலப்பாக்கம் ஊராட்சி ஆரம்பிக்கும் இடத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டிருந்தன. இதுபற்றி கௌதம் என்பவர், தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியனை டேக் செய்து, இந்த பகுதிகளில் ஏன் அரசு முறையான கழிவு மேலாண்மை செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் தயவு செய்து நடவடிக்கை எடுங்க வேண்டும் என்றும், இந்த பகுதிகளை சிறந்த சாலைகள் மற்றும் கழிவு மேலாண்மைக்கு தகுதியான இடமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

குப்பைகளை அகற்றுவது தொடர்பாக அவர் வைத்த கோரிக்கையை கவனித்த தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் உடனடியாக அந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனை தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+