அடடே.. களத்தில் குதித்த அடுத்த வாரிசு.. தமிழச்சிக்கு ஆதரவாக வீடு வீடாக மகள் பிரச்சாரம்!
சென்னை: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக அவரது மகள் சரயூ வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். இவர் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகனாவார்.
இவரது இயற்பெயர் சுமதி. சென்னை கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிய இவர் சிறந்த இலக்கியவாதியாவார். இவர் திமுக, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

வாக்குச் சேகரிப்பு
இவருடன் சேர்ந்து திமுக முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியனும் தேர்தல் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக அவரது மகள் சரயூ வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னுரிமை
அவர் நந்தனம் பகுதியில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுகவை பொதுவாக வாரிசு அரசியல் செய்யும் கட்சி என கூறுவதுண்டு. தேர்தலிலும் வாரிசுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு.

வாரிசு அரசியல்
தற்போது கருணாநிதிக்கு ஸ்டாலின் இருந்தது போல், ஸ்டாலினுக்கு மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும் உள்ளனர். இதில் உதயநிதி தற்போது போராட்டக் களங்களிலும் பிரசாரக் கூட்டங்களிலும் காணப்படுகிறார். இதுவும் ஒரு வகை வாரிசு அரசியல்தான்.

பரபரப்பு
இவர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்த போது அழகான வேட்பாளர் என கூறியது வைரலானது. இந்த நிலையில் இவரது மகள் சரயூவும் தற்போது களம் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications