ம்ம்ம் ஆரம்பியுங்கள்.. ஒரு ஏரியா விடாமல் ரெய்டு விடுங்க.. சங்கர் பட பாணியில்.. விஜய் போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுக்க உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

90களில் வந்த இயக்குனர் சங்கர் படங்களில் ஹீரோவை ரட்சகன் போல காட்டுவது வழக்கம். அதிலும் ஹீரோ.. அரசியலுக்கு வருகிறார் என்றால்.. அவர் தெரு தெருவாக ரெய்டு விடுவது.. கட்சியை வளர்ப்பது.. மக்களை கண்காணிப்பது.. கண்டிப்போடு இருப்பது.. விதிகளை கொண்டு வருவது என்று அதிரடிகளை நிகழ்த்தி பார்த்து இருக்கிறோம்.

seeman naam tamilar katchi vijay

அப்படி ஒரு உத்தரவு நடிகர் விஜய் கட்சிக்குள் பிறப்பித்து உள்ளார். ஆம்.. மாவட்ட கட்டமைப்பை ஆய்வு செய்து அறிக்கை அளியுங்கள் என பொதுச்செயலாளர் ஆனந்துக்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்காக மாவட்ட அளவிற்கு நிர்வாகிகள் சோதனை செய்யப்பட வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் கள ஆய்வுப் பணியை முடிக்கவும் விஜய் அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவும் ஆனந்துக்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் நிலை.. அதில் உள்ள நிர்வாகிகள்.. நிறை குறைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்காக ஆக்சன் படை ஒன்றை உருவாக்கவும். நேரடியாக சென்று ஆய்வு பணிகளை செய்யுங்கள். முதற்கட்டமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆய்வு பணிகளை கண்காணியுங்கள். மாநிலம் முழுக்க எல்லா ஏரியாவிற்கும் செல்லுங்கள் என்று விஜய் உத்தரவு பிறப்பித்து உள்ளாராம்.

ஆக்சன் மேல் ஆக்சன்: இது போக த.வெ.க.வின் தலைமையில் எடுக்கும் முடிவுகள், அரங்கக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விபரங்கள் திமுக தலைமைக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. மாநில உளவுத்துறைதான் இந்த ரிப்போர்ட்டை முதல்வருக்கு அனுப்பி வைக்கிறது.

ஆக, கட்சியின் ரகசிய முடிவுகள், விவாதிக்கப்படும் தகவல்கள் உளவுத்துறைக்கு எப்படி செல்கிறது? என்கிற சந்தேகம் விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறதாம். ஏனெனில், சமீபத்தில், விஜய் மற்றும் முக்கிய நபர்கள் 3 பேர் மட்டுமே இருக்கும் ஒரு சந்திப்பில் பேசப்பட்ட தகவல், அந்த சந்திப்பு முடிந்த அடுத்த 2 மணி நேரத்தில் திமுகவில் இருக்கும் விஜய்யின் நண்பர் ஒருவர், விஜய்யிடம் இது குறித்து கேட்டபோதுதான் விஜய் அதிர்ச்சியடைந்து திருக்கிறார்.

அதனால்தான், ரகசிய தகவல்கள் லீக் ஆகிறது என்கிற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டதாம். அந்த சந்திப்பில் அப்படியொன்றும் வெளியே தெரியக் கூடாத விசயங்கள் இல்லை. ஆனால், இந்த விசயங்களே வெளியே போகிறதென்றால், மிக சீக்ரெட்டான விசயங்களும் வெளியே போகத்தானே செய்யும் ? என்கிற கேள்வி விஜய்க்கு ஏற்பட்டுள்ளதாம்.

இது பற்றி ஆய்வு செய்த போது, நீண்ட வருடங்களாக ரசிகர் மன்றத்தையும் விஜய்யையும் ஆக்ரமித்துக்கொண்டு, தற்போது கட்சியின் பெரிய பொறுப்பில் இருக்கும் புஸ்சி ஆனந்த் தான் உளவுத்துறையிடம் நெருக்கமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டார் விஜய். இதனை அடுத்து அவரிடம் கோபம் காட்டாமல், அமைதியாக இருந்த விஜய், தற்போது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் பணி செய்யட்டும் என்கிற முடிவை எடுத்துள்ளாராம். புஸ்சி ஆனந்த்தின் பதவி, பாண்டிச்சேரி என்கிற அளவில் சுருக்கப்படும் போது தமிழ்நாட்டு அரசியலை கவனிக்க மற்றொரு பொதுச் செயலாளரை நியமிக்கவும் ஆலோசித்துள்ளார் விஜய். ஆக, த.வெ.க. விரைவில் இரண்டு பொதுச்செயலாளர்களை பார்க்கப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+