ஒடிசா அரசை மட்டும் பாராட்டுவதா... கமலுக்கு டார்ச் இருந்தாலும் பார்வை கோளாறு? தமிழிசை தாக்கு
சென்னை: ஃபனி புயல் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக ஒடிசா அரசை மட்டும் பாராட்டிய கமல் ஹாசனுக்கு டார்ச் இருந்து பார்வை கோளாறு என தமிழிசை சௌந்திரராஜன் விமர்சனம் செய்துள்ளார்..
வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் ஒடிஸா மாநிலம் புரியில் நேற்று முன் தினம் கரையை கடந்தது. இதன் பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து பல லட்சம் மக்களை ஒடிசா அரசு வெளியேற்றியது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. இதனால் மிகப்பெரிய அளவில் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டது. இதற்காக ஐநா சபை மத்திய அரசையும், ஒடிசா அரசையும் பாராட்டயது.

கமல் பாராட்டு
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல் ஹாசன், ஒடிசா அரசை வெகுவாக பாராட்டினார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில். "தேசிய பேரிடர்களை எப்படி கையாள்வது என்பதற்கு ஒரிசா சிறந்த உதாரணம். சுயமாரியாதை உள்ள எந்த அரசும், ஒடிசாவின் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

கமல் மீது தாக்கு
ஒடிசா அரசை மட்டும் பாராட்டி விட்டு மத்திய அரசை பாராட்டாமல் போன கமலை பாஜக மாநில தலைவர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், "நம்மஊர் கமல் ஒரிசா முதல்வரை மட்டுமே பாராட்டுகிறார்.

பார்வை கோளாறு
புயல் நிவாரணம் சூப்பர் என்கிறார்? இதிலுமா? மோடி வெறுப்பு? புயல் வரும் பாதையை துல்லியமாக கணித்து எச்சரிக்கை அளித்த இஸ்ரோ? களத்தில் முப்படை பேரிடர் மீட்பு குழு தயாராக இருந்தது. புயல் வரும் முன்பே 1000 கோடி நிவாரணம் கொடுத்து யார்? டார்ச்? இருந்தாலும்? பார்வை கோளாறு?" என கூறியுள்ளார்.

தானே புயல்
மேலும் தானே புயலுக்கு மன்மோன்சிங் வந்தாரா? என கேட்டால் ப சிதம்பரம் வந்தாரே? எனகூறும் காங். தலைவரே, இங்கே நிர்மலா சீதாராமன் வந்தாரே? என பதிலடி கொடுத்துள்ளார்.

ஒக்கி புயல்
ஒக்கி புயல் வந்தபோது முப்படை தளபதிகளின் துணையோடு திருவனந்தபுரத்தில் தங்கி விடியவிடிய களப்பணி நிவாரணம் ஆற்றியவர் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாசீதாராமனை எந்த தமிழக அரசியல் தலைவராவது பாராட்டினீர்களா? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications