“தமிழிசையால் காணாமல் ஆக்கப்பட்டு இருப்பேன்..” சோபியா பரபர கடிதம் -பாஜகவை எதிர்த்து மீண்டும் முழக்கம்
சென்னை: தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்பாக கோஷம் எழுப்பிய வழக்கில் இருந்து மாணவி சோபியா விடுவிக்கப்பட்ட நிலையில் தனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "என் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) இன்று அளித்த தீர்ப்பு, எனது 5 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

"பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என்ற நான்கு வார்த்தைகளை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் செவிகளில் கேட்கும் அளவுக்கு ஒருமுறை தான் கூறினேன். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள்-கட்சி ஆட்களை என் மேல் ஏவியது, நடந்ததை தவறாக சித்தரித்தது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி என்னை மிரட்டியது மற்றும் சட்டரீதியாக துன்புறுத்தியது ஆகியவை அனைவரும் அறிந்ததே.
இது ஒரு கடினமான போராட்டமாக இருந்தது. எனது வழக்கறிஞர் டி. கீதா மற்றும் அவரது குழுவிற்கு நான் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியது சர்ச்சையாக்கப்பட்டவுடன் எனது ஒரே நோக்கம், அந்த நான்கு வார்த்தைகள் கவனம் சிதறாமல் குறி தவறாமல் நான்கு திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதே.
என்னுடைய அந்த மௌனத்தை நிரப்பி, என் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, எனது உரிமைகளுக்காக குரல் கொடுத்த மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் உட்பட அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பெரிய அளவில் அரசியல் நெருக்கடி மற்றும் துன்புறுத்தல்களிடம் இருந்து நான் தப்பிக்க மிக முக்கிய காரணம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொது வாழ்வில் உள்ள முற்போக்குவாதிகள், மற்றும் பொது மக்கள் அனைவரின் துரிதமான அளவுக்கதிகமான ஆதரவே. நன்றி! நன்றி!
Madras high court has quashed the FIR and charge sheet filed against me in 2018 at the behest of BJP's then TN state president Dr. Tamilisai Soundarajan. Please read my public statement. வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! #FascistBJPDownDown #பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக pic.twitter.com/9hhhGr3zhE
— Sofia | சோபியா (@Red_Pastures) August 16, 2023
இல்லாவிடில், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கைகளால் நான் காணாமல் போயிருப்பேன். இறுதியாக, நாம் அனைவரும் அரசியல் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும் என்றும் நான் மனதார விரும்புகிறேன். ஆழ்ந்த நன்றியுடன், சோபியா." என்று குறிப்பிட்டு உள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவி சோபியா "பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என்று முழக்கங்களை எழுப்பினர். அவரை தமிழிசை தலைமையில் பாஜகவினர் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சோபியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் நேற்று விடுவிக்கப்பட்டார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications