திருமா நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு மெயின் ஸ்பான்ஸரே டாஸ்மாக்தானாமே தெரியுமா? தமிழிசை கிண்டல்
சென்னை: திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஸ்பான்ஸர்ஸ் யாரென்றால் டாஸ்மாக்தான் என தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: திருமாவளவன் அவர்கள் சிறுத்தையாக ஆரம்பித்து சிறுத்து போயிருக்கிறார் அவ்வளவுதான்! மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிறகு ஆட்சியில் பங்கு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டு அது நான் இல்லை, அட்மின்தான் என கூறிவிட்டார்.

சினிமா மாதிரியான ஒரு டிராமா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஆளும் கட்சிக்கு எதிராகவே மாநாட்டை நடத்துவோம் என்றெல்லாம் கூறிவிட்டு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்ததும் சிறுத்து போய்விட்டார்கள்.
திமுகவை மேடையில் வைத்துக் கொண்டு திருமாவளவனால் மது ஒழிப்பு குறித்து பேச முடியுமா? என்ன மாதிரியான கண்டனத்தை நீங்கள் தெரிவிக்க போகிறீர்கள்? நான் ஒரு கார்ட்டூன் படித்தேன். இந்த மது விலக்கு மாநாட்டிற்கு ஸ்பான்ஸர்ஸ் யார் என்றால் டாஸ்மாக்தான். என்ன நடக்குது? கடந்த 3 ஆண்டுகளாக திருமாவளவனுக்கு மதுவிலக்கை பற்றி அக்கறை இல்லை.
தற்போது 2026 ம் ஆண்டு பக்கத்தில் வந்துவிட்டது. தேசிய கல்வி கொள்கையை ஒப்புக் கொள்ளவில்லை. தேசிய மது கொள்கையை மட்டும் ஒப்புக் கொள்வீர்களா? மாநில உரிமைகள் எங்கே போகிறது, மாநில சுயாட்சி எங்கே போகிறது. மதுவிலக்கை பாஜகவும், பாமகவும் வேகமாக எடுத்துச் சென்றிருக்கிறது. இதுவரை திருமாவளவன் அட்மின் என சொல்லி கேள்விப்பட்டதில்லை. தாங்கள் ஒரு தவறு செய்துவிட்டோம் என்பதை அட்மிட் செய்ய முடியாமல் அட்மின் மீது பழி போடுகிறார். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். அதற்காக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச் ராஜா சொன்னதை போல் பிரதமரின் 74 ஆவது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு தொண்டரும் 74 உறுப்பினர்களை சேர்க்குமாறு முனைப்புடன் ஈடுபட்டுள்ளோம்.
மேலும் பிரதமரின் பிறந்தநாள் தொடங்கி மகாத்மா காந்தி பிறந்தநாள் வரை சேவை தினங்களைக் கொண்டாடுகிறோம். கட்டணமில்லா பேருந்து பயணம், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில், பெண்களை லட்சியவாதிகளாக லட்சாதிபதிகளாக மாற்றி அவர்கள் பல பேருக்கு வேலையளிக்கும் மாபெரும் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னும் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாற்றும் திட்டத்தில் பலனடைய போகின்றனர் என பிரதமர் சொல்லியிருக்கிறார். இதற்காக பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை ஓணம் வாழ்த்தை முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் சொல்லியிருந்தார்.
தமிழக அரசியல்வாதிகளின் பிள்ளைகளில் எவ்வளவு பேர் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் சமச்சீர் கல்வியை படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். அங்கு மும்மொழிக் கொள்கை இருக்கும் போது ஏன் அரசு பள்ளிகளில் இருக்கக் கூடாது. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் யாருக்கும் எந்த அங்கீகாரமும் கிடைக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது என தமிழிசை தெரிவித்தார்.
-
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில்












Click it and Unblock the Notifications