சோபியா கிட்ட கேளுங்க.. கனிமொழி நக்கல்... பாட்ஷா மனைவியை தாக்கியது யாரு.. தமிழிசை சூடான பதிலடி!
தமிழிசை சவுந்தராஜனும் கனிமொழியும் ஒருவர் மீது ஒருவர்விமர்சனம் செய்து கொண்டனர்.
சென்னை: அடடா.. ஜோடி மாறி போச்சே... வழக்கமாக தமிழிசையும், ஜோதிமணியும்தான் ட்விட்டரில் மல்லு கட்டுவார்கள்... இந்த முறை ஜோதிமணி போய் கனிமொழி வந்துவிட்டார்!
தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனும், திமுக எம்பி கனிமொழியும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இதனால் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது தூத்துக்குடி!
எதிர்பார்த்த தொகுதி கிடைத்துள்ளதால் கனிமொழி உற்சாகத்தோடும், எதிர்பார்க்காத தொகுதி கிடைத்து விட்டாலும், தமிழிசை மனதைரியத்தோடும் தேர்தல் களத்தை சந்தித்து வருகிறார்கள்.

சோபியா
தொகுதியில் மல்லுக்கட்டுவது பத்தாமல் ட்விட்டரிலும் சண்டை தொடர்கிறது. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது கனிமொழிதான். "கருத்து சுதந்திரம் பற்றி கல்லூரி மாணவி சோபியாவிடம் தான் தமிழிசை கேட்க வேண்டும்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
|
தமிழிசை பதில்
பாஜகவில் யாரை பற்றி பேசினாலும் சும்மா விடாத தமிழிசை, தன்னை பற்றியே பேசியதற்கு பதிலடி தராமல் இருப்பாரா என்ன? உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், "சாதிக் பாட்சா மரணம் பற்றிய விளம்பரம் செய்த அவரது மனைவி மீது தாக்குதல் நடத்திய திமுக? பற்றி பெண்ணுரிமை பேசும் கனிமொழி? பதில் கூறுவாரா?" என்று நக்கலுடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
|
ரயில் பயணம்
ஆனால் இவர்கள் ரெண்டு பேரையும்விட ட்விட்டர்வாசிகள் போடும் சண்டை சுவாரஸ்யமாகவே இருக்கிறது. "ரயிலில் ஸ்டாலின் பயணியை கன்னத்தில் அறைந்தது மற்றும் பல, தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு போன்ற சம்பவங்கள் எந்த சுதந்திரம் மேடம்" என்று கனிமொழிக்கும், "பாசிச பாஜகவிடம் கருத்து சுதந்திரம் மட்டுமல்ல நல்லதை நினைக்க முடியாது" என்று தமிழிசைக்கும் பதிலடி கிடைத்துள்ளது.

கன்னத்தில் அறைந்தது
மேலும் "அதானே.. ரெண்டு பேரும் செஞ்ச தப்ப மாறி மாறி கேள்வி கேட்க வேண்டியது. ஆனால் ரெண்டு பேரும் அதற்கு தேவையான பதில் டுவீட் செய்ய திராணி இருக்கா???" என்று 2பேரையும் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications