ஊழலுக்கு எதிரானவர் யார்- மோடியா? மம்தாவா? ராகுல், ஸ்டாலின், நாயுடுவை வேடதாரிகள் என தமிழிசை விமர்சனம்
சென்னை: சிபிஐ அதிகாரிகளை கைது செய்த முதல்வர் மம்தாவை ஆதரிக்கும் ஸ்டாலின் அவர்களே யார் உண்மையில் ஊழலுக்கு எதிரானவர் என்பதை கூறுங்கள் என தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு குறித்து கொல்கத்தா கமிஷனரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர். மேலும் சிபிஐயை கண்டித்து மம்தா தர்னா போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மம்தா, மாநில தலைவர்களை எல்லாம் பிப்ரவரி 9-ஆம் தேதி கொல்கத்தா வருமாறு அழைத்துள்ளார். இதில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கிறது. இந்நிலையில் ஸ்டாலினை தனது தொடர் டுவீட்கள் மூலம் தமிழிசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
|
வேடதாரிகள்
இதுகுறித்து அவர் தனது டுவீட்களில் கூறுகையில்,
மோடி அரசு எடுத்த ஊழல் எதிர்ப்பு தொடர் நடவடிக்கைக்கு வெற்றி! மேற்கு வங்கத்தில் சாரதா சீட் பண்டு ஊழலை உயர்நீதிமன்ற ஆணைப்படி விசாரிக்கச்சென்ற சிபிஐ அதிகாரிகளை கைது செய்யும் முதல்வர் மம்தாவை ஆதரிக்கும் ஸ்டாலின்!ராகுல்,நாயுடு ?யார் உண்மையில் ஊழலுக்கு எதிரானவர்? மோடியா? மம்தாவா? வேடதாரிகள்
|
கொல்கத்தா பயணம்
வைகோ! ராகுல்! லல்லு மகன்! திருமா? ஆதரவு யாருக்காக? சீட்டுகட்டி ஏமாந்த சாமானியர்களுக்கா? இல்லை சாரதா சிட் ஊழலில் சிக்கிய திருணாமுல்காங்.? மம்தாவுக்கா?ஊழல் விசாரணையை எதிர்க்கும் ஊழல்வாரிசுகள்? கொல்கத்தா பயணிப்பது யாருக்காக? இங்கே அதை ஆதரிக்கும் சந்தர்ப்பவாதிகள்? மக்களிடம் சொல்வோம்! வெல்வோம்!
|
காமெடி பட்ஜெட்
மோடியின் சரவெடி பட்ஜெட்டை காமெடி பட்ஜெட் என்கிறார். ஸ்டாலின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வெறும் புஸ்வானமாகிப் போனவர்கள் நீங்கள்? நாங்கள் பொக்ரானில் அணுகுண்டு வெடித்த வாஜ்பாய் வாரிசுகள்! ஊசிப்பட்டசுகள் மோடி அலையில் நமத்துப் போய் வெடிக்காது. 2019-இல் மீண்டும் மோடியை பிரதமராக்குவோம்.
|
மம்தாவை ஆதரிக்கும் ஸ்டாலின்
சிபிஐ லண்டனுக்குச் சென்று வங்கிக் கடன் வாங்கிய ஊழல்வாதியை கைது செய்து வருகிறது. அதே சிபிஐ மேற்கு வங்காளத்திற்கு சாரதா சீட்டு பண்டு விவகாரத்தில் 17லட்சம் சாமானியர்களை 4000 கோடி வரை ஏமாற்றிய வழக்கை உச்சநீதிமன்ற ஆணைப்படி விசாரிக்க சென்ற போது சிபிஐ கைது செய்யும் மம்தாவை ஆதரிக்கும் ஸ்டாலின்? என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications