ஆளுநர் ‘வாரிசு’ பதவியில்லை.. கவர்னர் பதவி என்பதே காலாவதியானதா? கனிமொழியால் கடுப்பான தமிழிசை!
சென்னை :ஆளுநர் ஆர் என் ரவி குறித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழியின் கருத்துக்கு முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் பல்கலைக் கழக நிகழ்வுகளில் வேந்தர் என்ற முறையில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் சனாதானம் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக களமிறங்கியுள்ளன.

ஆர்.என்.ரவி
திமுக மட்டுமல்லாது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைகள் கண்டனங்கள் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட்டணி கட்சிகள் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஆளுநர் ரவி பாஜக தலைவர் போல நடந்து கொள்வதாகவும் அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

கடுமையான குற்றச்சாட்டு
தே நேரத்தில் இந்த விவகாரங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஆர்.என்.ரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழக நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் தொடர்ந்து இந்தியா குறித்தும், இந்து மதம், சனாதனம், பாரதம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை மீறி ஆளுநர் செயல்பட்டு வருவதாக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கனிமொழி எம்பி
தற்போது தமிழக விவகாரங்களிலும் ஆளுநர் ரவிக்கு ஆதரவாக தமிழிசை சௌந்தரராஜன் தலைகாட்டி வருகிறார். ஏற்கனவே தெலுங்கானா புதுச்சேரி மாநில ஆளுநராக இருக்கும் அவர் தமிழக விவகாரங்கள் குறித்தும் தமிழக ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆளுநர் ரவி விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க திமுக கூட்டணி கட்சிகள் நேரம் கேட்டிருப்பதாக கனிமொழி கூறியிருந்தார். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக கவர்னர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான். கவனர் பதவி என்பது தேவையே இல்லாத ஒன்று. அதை புரிந்துகொண்டு ஆளுநர் பதவியை ரத்து செய்தால் பல சிக்கல்கள் இருக்காது என பேசியிருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்
இந்நிலையில் கனிமொழியின் கருத்துக்கு முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"நாட்டில் பிரிவினை பேசுவதாக கூறிய இராணுவ வீரரின் வீட்டுக்கு சென்று ஒரு இயக்கைத்தை சேர்ந்தவர்கள் மிரட்டி துன்புறுத்தி உள்ளனர். இது தேசப்பற்றை குலைக்கும் செயல். ஆளுநராக இருந்தால் கூட, நான் தேசபற்று உடையவர் என்பதால் இந்த கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. .

ஆளுநர் காலாவதியானவர்
தமிழக ஆளுநர் காலாவதியானவர் என கருத்து சொல்வதை திமுக எம்.பி கனிமொழி தவிர்க்க வேண்டும். மரியாதை கொடுக்க கூடாது என்கிற எண்ணம் பல பேருக்கு உண்டு. கருத்து கூறலாம். ஆனால் மிக மோசமான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல" என கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications