இவரது கவலை அணியை பற்றியதா? இல்லை அணையை பற்றியதா?.. தமிழிசை கேள்வி
Recommended Video

சென்னை: திமுக அணியை பலவீனப்படுத்த பாஜக முயல்கிறது என திருமாவளவன் பேசியதை பார்க்கும் போது இவரது கவலை அணை பற்றியது அல்ல என்றும் அணியை பற்றியதுதான் என்றும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டிக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவீனப்படுத்த முயற்சி
இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் திமுக தோழைமை கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில் திமுக அணியை பலவீனப்படுத்த பாஜக முயல்கிறது என்று கூறியுள்ளார்.

உண்மை
துரைமுருகனின் கூட்டணி கட்சிகள் வேறு தோழமை கட்சிகள் வேறு என்ற பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது வைகோவுக்கும் திருமாவளவனுக்கும் மனஸ்தாபத்தை கொடுத்தது. இந்நிலையில் கூட்டணிக்குள் ஏதோ சலசலப்பு என கூறிவந்த நிலையில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பது இவர்கள் இருவரும் ஸ்டாலினை சந்தித்த பிறகுதான் தெரிய வந்தது.
|
தமிழிசை பதில்
இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை கவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் கஜா புயல் தாக்கியபின் எத்தனை நாட்கள் ஸ்டாலின் புயல் பாதித்த இடங்களுக்குச் சென்றார்? இன்று திருச்சிக்கு போராடச் சென்றிருப்பவர்கள் அனைவரும் மீட்புப் பணிக்கு சென்றிருந்தால்..மீட்புப் பணி துரிதமாக நடக்க உதவியிருக்கும்.இவர்களின் அக்கறை"அணி"மீதுதான்"அணை"மீதல்ல என்பதை திருமாவளவனின் உரை உணர்த்துகிறது.

அணியா அணையா
திருமாவளவன்..ஆர்ப்பாட்டத்தில்...பேசுகிறார்.."திமுக அணியை.. பலவீனப்படுத்த.. பாஜக.. முயல்கிறது.. என்கிறார்... ஆக இவரின் கவலை.. அணையைப் பற்றியது அல்ல... அணியைப் பற்றியதுதான்! என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம்












Click it and Unblock the Notifications