சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளிநாடு பிரதமர் என கேலி பேசிய திமுகவே இதை பாருங்க.. தமிழிசை சர்பிரைஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    இதெல்லாம் திமுக கண்களில் படாது- தமிழிசை- வீடியோ

    சென்னை: வெளிநாடு பிரதமர் என கேலி செய்த திமுகவே இந்த செய்தியை பாருங்கள் என தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ஓமன் நாட்டில் 17 இந்தியர்கள் அந்நாட்டு இளவரசரால் தண்டனை விதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் 17 பேரையும் ரமலான் திருநாளை முன்னிட்டு விடுதலை செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இது இரு நாடுகளுக்கிடையே உள்ள நட்புறவை காட்டுகிறது. இந்த நிகழ்வுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், கருணை அடிப்படையில் 17 இந்தியர்களை விடுதலை செய்யும் போக்கு பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

    "யாரும் பேசக்கூடாது".. கொஞ்ச நேரத்தில் உடைத்தெறியப்பட்ட அதிமுகவின் உத்தரவு

    உறவு

    உறவு

    ஜெயசங்கரின் ட்வீட்டை மேற்கோள்காட்டி தமிழிசை ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் தொலைநோக்கு பார்வையில் ராஜீய ரீதியிலான உறவுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த 17 பேர் விடுதலை என்பதாகும்.

    திமுகவின் பார்வை

    இந்த வெற்றிக்கு வெளியுறவுத் துறைக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் திமுகவோ எப்போதும் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களை கேலி செய்து கொண்டிருக்கும். பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கை மூலம் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை திமுகவின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன் என தெரிவித்துள்ளார் தமிழிசை.

    நெட்டிசன்கள்

    நெட்டிசன்கள்

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    பொருள் கொள்ளலாமே

    சரி மோடிக்கு அந்த பெருமை போகட்டும்
    ஈகை திருநாள் தியாக திருநாளில் ஓமன் அரசு பெருந்தன்மையோடு நடந்துகொள்கிறது. இஸ்லாம் மதம் அன்பை விதைக்கிறது என்றும் நீங்கள் பொருள் கொள்ளலாமே!

    அரசியல் செய்யாதீர்

    கருணை அடிப்படையிலான விடுதலை இது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய முயற்சிக்காதீர். இதனால்தான் தூத்துக்குடி மக்கள் உங்களை புறக்கணித்தனர். உங்கள் பாதையை சரி செய்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    English summary
    TN BJP President Tamilisai Soundararajan tweet that Congratulations for the success of diplomatic relationship under visionary. @PMOIndia aptly executed by excellent MEAIndia Team! TN oppDMK arivalayam always critical of PM foreigntours must open their eyes to see lives saved.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X