திடீரென மாறும் டிரெண்ட்.. தென்சென்னையில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது?
சென்னை: தமிழ்நாடு முழுக்க கொரோனா கேஸ்கள் குறைந்து வரும் நிலையில் தென் சென்னையில் மட்டுமே கேஸ்கள் லேசாக உயரத்தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் தினமும் 1600க்கும் குறைவான கேஸ்களே பதிவாகி வருகிறது. அதோடு தினசரி பதிவாகும் கேஸ்களை விட தமிழ்நாட்டில் டிஸ்சார்ஜ் ஆகும் கேஸ்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 17,322 பேர் ஆக்டிவ் நோயாளிகள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 25,59,637 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

மரணம்
தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 25 - 30 பேர் வரை கொரோனா காரணமாக பலியாகி வருகிறார்கள். மொத்தமாக 34,878 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். சென்னையில் இதுவரை 5,43,786 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் ஆக்டிவ் கேஸ்களாக தற்போது 1,873 பேர் மட்டுமே உள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
இதுவரை சென்னையில் 5,33,516 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8,397 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் தினசரி கேஸ்கள் 200க்கும் கீழ்தான் பதிவாகி வருகிறது. கடைசியாக சென்னையில் ஆகஸ்ட் 19ம் தேதி 201 கேஸ்கள் பதிவானது. அதன்பின் சென்னையில் கொரோனா கேஸ்கள் தினமும் 200க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் 180க்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வருகிறது.

அதிக கேஸ்கள்
சென்னையில் தினமும் 200க்கும் அதிகமான நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் தென் சென்னையில் திடீரென கொரோனா கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இவை தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகள் ஆகும்.

தென்சென்னை
இது தொடர்பாக கொரோனா டேட்டா அனலிஸ்ட் விஜயானந்த் செய்துள்ள ட்வீட்டில், கொரோனா கேஸ்கள் தென்சென்னையில் ஆலந்தூர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாறாக வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் கேஸ்கள் குறைகிறது அல்லது சமநிலையில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சென்னை
மத்திய சென்னை பகுதிகளான திருவிக நகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வடசென்னை பகுதிகளான திருவெற்றியூர், மணாலி, மாதவரம் போன்ற பகுதிகளில் கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. தென் சென்னையில் மட்டுமே திடீரென அதிகரிப்பதற்கான காரணம் சரியாக தெரியவில்லை.

லாக்டவுன்
இருப்பினும் தமிழ்நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் வந்துள்ளது. பலர் அலுவலகம் செல்ல தொடங்கி உள்ளனர். கல்லூரிகள் திறக்க உள்ளதால் சென்னை நோக்கி மீண்டும் மக்கள் வர தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தென் சென்னையில் லேசாக கேஸ்கள் உயர்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது .
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications