என் சட்டையை கிழித்தனர்.. நான் மன்னித்தேன்.. சொல்கிறார் ரியல் மாமன்னன் முன்னாள் சபாநாயகர் தனபால்
சென்னை: சபாநாயகராக பதவியேற்ற போது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது என்று கூறியுள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபால். எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்து ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பெற்றதால் அமைச்சராக, சபாநாயகராக பதவிகளை அலங்கரித்தவர். மாமன்னன் படம் வெளியான நாளில் இருந்தே ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறார் தனபால். தனது அரசியல் பயணங்களை தனியார் ஊடகத்திற்கு பேட்டியாக அளித்துள்ளார்.
மாமன்னன் படம் பற்றி பேசிய தனபால், நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பதால் அந்த கதையின் முடிவு அப்படி இருப்பதால் என்னைப்பற்றி கதை என்று சொல்கின்றனர். நான் இன்னமும் படம் பார்க்கவில்லை. அம்மா எனக்கு இத்தனை பதவி கொடுத்தனர். என்னை சார்ந்துதான் இந்த படம் தயாரித்து உள்ளனர் என்றால் அது அம்மாவிற்கு கிடைத்த வெற்றி. என்னுடைய கதை என்று ஜனங்கள் சொல்கின்றனர்.
உதயநிதி நடித்தாலும் தயாரித்தாலும் கிரெடிட் என்னவோ அம்மாவிற்குத்தான். உதயநிதி இப்போது சொன்னதை அம்மா என்னை பல ஆண்டுகளுக்கு முன்பே என்னை சபாநாயகராக சட்டசபையில் அமர வைத்தார்.
இன்றைக்கும் ஒரு சமுதாயத்தின் முன்பாக உட்கார கூட மாட்டார்கள், உட்கார அனுமதிக்க மாட்டார்களா என்ற கேள்விக்கு பதில் சொன்ன தனபால், எனக்கு அது போல நேர்ந்ததில்லை. அது போல இருந்தால் தவறு. யாராக இருந்தால் அமர வைக்காமல் பேசுவது மரியாதை இல்லை.
ஊரில் சின்னச் சின்ன தகராறுகள் வரும். இது போல செய்யக்கூடாது என்று அட்வைஸ் செய்வேன் சமுதாயத்தில் இப்போது எல்லாம் படிப்பு அறிவு வந்து விட்டது. ஜனங்கள் தெளிவாக இருக்கிறார்கள். போராட வேண்டிய அவசியம் இல்லை என்றார். படிப்பின் மூலம்தான் சமுதாயத்தில் முன்னேற முடியும் என்றும் சொன்னார்.
மாமன்னன் படம் வெளியான நாளில் இருந்தே பலரும் எனக்கு போன் செய்கின்றனர். உங்க கதை போல இருக்கு என்று போன் செய்து சொல்கின்றனர்
எனக்கு அது போல அனுபவங்கள் எதுவும் இல்லை ஆனால் ஆச்சரியம் இல்லை. நிறைய பேர் போன் செய்து பேசினார்கள். அம்மாவிற்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொன்னேன்.

மாரி செல்வராஜ் படங்கள் எதையும் நான் இதுவரை பார்த்ததில்லை. நான் பழைய படங்கள் டிவியில் எம்ஜிஆர் படங்கள் பார்த்தேன். அவரது
நடிப்பின் மூலம் கவரப்பட்டு பார்த்தேன். அதனால் அரசியலில் சேர்ந்தேன். நல்ல படங்கள் டிவியில் போட்டால் பார்ப்பேன். மாமன்னன் விரைவில் பார்ப்பேன் என்றார்.
தனது பள்ளி, கல்லூரி படிப்பு பற்றியும் பகிர்ந்து கொண்டார் தனபால். கருப்பூர் குக்கிராமம் விவசாய குடும்பம். அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். சேலம் கலைக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன். அரசியலில் ஈடுபட்டு வளர்ச்சியடைந்தேன். கல்லூரிகளில் வசதியான குடும்பத்தை சேர்ந்த எனது நண்பர் வீட்டிற்கு எம்ஜிஆர் வந்திருந்தார். அவரை பார்த்த உற்சாக மிகுதியில் கட்டிப்பிடித்தேன். அப்போது எம்ஜிஆர் திமுகவில் இருந்தேன். என்ன படிக்கிறாய் என்று கேட்டார்.
எம்ஜிஆரை கட்டிப்பிடித்த போது யாரும் என்னை தடுக்கவில்லை. எம்ஜிஆர் ரொம்ப சந்தோஷப்பட்டார். அது மறக்க முடியாத தருணம்.
எங்க வீட்டில் யாரும் படித்ததில்லை நான் மட்டுமே படித்தேன். அரசு சலுகை இருந்த காரணத்தால் படித்தேன். சில நாட்களிலேயே கட்சி ஆரம்பித்தார். நான் கட்சியில் மாணவர் அமைப்பில் சேலம் மாவட்ட மாணவர் அமைப்பாளராக பணி செய்தேன்.
கட்சியில் நன்றாக வேலை செய்தேன். தலைவரிடம் என்னைப்பற்றி நல்ல விதமாக சொன்னதால் சட்டசபை தேர்தல் வந்த உடன் சங்ககிரி, நாமக்கல், தலைவாசல் ரிசர்வ் தொகுதியில் எந்த தொகுதியில் நிற்கிறாய் என்று முடிவு செய்து என்னிடம் சொல் என்று சொன்னார். நான் சங்ககிரியில் நிற்கிறேன் என்று சொன்னேன் என்னை தலைவர் அறிவித்தார். நான் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றேன். மொத்தம் 4 முறை சங்ககிரி தொகுதியில் வென்றுள்ளேன்.
நான் சேலத்தில் ஊர் ஊராக பேசி கூட்டத்தில் பேசியுள்ளேன். எனக்கு சீட் கிடைத்த உடன் எனக்கு ஆதரவு கொடுத்தனர் நான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தேன். தலைவரிடம் நான் நேரடியாக பேசுவேன். தலைவரின் செல்லப்பிள்ளை என்பதால் என்னை யாரும் ஒதுக்கவில்லை. எனக்கு அப்போது அமைச்சர் பதவி கிடைப்பதில் தட்டிப்போனது. நான் தலைவரை பார்க்க போகாமல் இருந்தேன். அப்போது சட்டசபையில் என்னுடைய கையை பிடித்து காரில் ஏற்றி அழைத்துக்கொண்டு போனார். உனக்கு வயது உள்ளது எப்போது என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சொன்னார்.
நான் அமைச்சர் பதவி எதிர்பார்த்தேன் அவர் கொடுக்காமல் போனது ஏமாற்றமாக இருந்தது. அதை தெரிந்து எம்ஜிஆர் அவர்கள் சமாதானம் செய்தார். 1985ல் எனக்கு கார் விபத்து நிகழ்ந்தது. பஸ் மீது கார் மோதி விட்டது. அந்த விபத்தில் இருந்து மீண்டு வர இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய உடனே என்னை வந்து பார்த்தார் எம்ஜிஆர். நான் படுக்கையில் படுத்தபடியே பதவியேற்றுக்கொண்டேன்.
1977ஆம் ஆண்டு 25 வயது முடிந்து 26வது வயதில் நாம் எம்எல்ஏவாக வெற்றி பெற்றேன். எம்ஜிஆர் மரணமடைந்த உடன் ஜெயலலிதா அணியில் சேர்ந்தேன். கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்த போது கூட்டம் போட்டேன். அதனால் அவரது பின்னால் நான் சென்றேன். சங்ககிரியில் நின்று நான் வெற்றி பெற்று அமைச்சரானேன்.
உணவுத்துறை அமைச்சராக கொடுத்தது காரணம் பற்றி இப்போது பேசுபொருளாகியுள்ளது. நிறைய கசப்பான அனுபவங்கள் உள்ளது அது பற்றி வேண்டாம். ஜெயலலிதா நேராக என்னை கூப்பிட்டு பேசினார். கூட்டுறவுத்துறை, உணவுத்துறை என்று கொடுத்தார். அம்மா தெளிவாக இருந்தார். நான் நன்றாக செயல்படுவேன் என்று எனக்கு பொறுப்பு கொடுத்தார்.
நான் துணை சபாநாயகராக இருந்து செயல்பட்டதை பார்த்தார். ஜெயக்குமார் சபாநாயகராக இருந்தார். ஒருநாள் ஜெயலலிதா கூப்பிட்டு திடீரென நீங்கதான் சபாநாயகர் தனபால் என்று சொன்னார். நான் நன்றி சொன்னேன். 2016ஆம் ஆண்டும் வெற்றி பெற்ற போது மீண்டும் சபாநாயகர் நீங்கதான் என்று சொன்னார். எதிர்கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. நீங்கள் நன்றாக செயல்படுவீர்கள் என்று சொன்னார்.
என்னை அறியாமல் எனக்கு கண்ணீர் வந்து விட்டது. இவ்வளவு பெரிய பொறுப்பு என்னை நம்பி கொடுக்கிறார்கள் என்று கண் கலங்கினேன். என்னை அறியாமல் நான் மரியாதையாக இருப்பேன். நான் நாற்காலியின் நுனியில் அமர்ந்த போது கூட கம்பீரமாக அமரவேண்டும் என்று சொன்னார்.
நான் நடந்து வரும் போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பார்கள். அப்போது உணர்ச்சி வசப்பட்டேன். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது சட்டசபையில் கலாட்டா நடந்தது. என்னுடைய சட்டையை கிழித்தனர். பிடித்து தள்ளினார்கள். நான் எல்லாவற்றையும் மன்னிட்டு விட்டேன். நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னுடைய மீது மரியாதை. என் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் நான் எதிர்கொண்டேன்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. சங்ககிரி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அரசு கலைக்கல்லூரி, ராசிபுரத்தில் சாலை போக்குவரத்து கொண்டு சென்றேன். தனித்தொகுதி என்பது இன்னமும் தேவைப்படுகிறது. அரசு அரசியலைப்பில் கொடுத்த வாய்ப்பு. பலர் ஜெயித்து வந்திருக்கிறார்கள். நான் கூட்டுறவுத்துறை உணவுத்துறை அமைச்சராக இருந்த போது ரேசன் கடைகள் திறந்தேன்.
"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு "
நாவை அடக்க வேண்டும் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சிரித்தார் தனபால்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications