மாநில சுயாட்சிக்கான முதல்வர் ஸ்டாலின் யுத்தம்- ஆளுநர் ரவிக்கு எதிராக 4 மாதத்தில் 2-வது தீர்மானம்!
சென்னை: மாநிலங்களின் சுயாட்சிக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். தன்னிச்சையாக, மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் 4 மாதங்களில் 2-வது முறையாக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். நிலுவையில் வைத்திருப்பதாலேயே மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக அர்த்தம் என்கிறார். திராவிடம் குறித்து விமர்சிக்கிறார். மாநில மக்களின் உணர்வுகளை துச்சமாக விமர்சித்து பேசி வருகிறார்.

இதனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாட்டில் கொந்தளிப்பு நீடித்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபை ஜனவரி மாதம் கூடியது. தமிழ்நாடு சட்டசபை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால் ஆளுநர் ரவியோ, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை புறக்கணித்துவிட்டு தன் போக்குக்கு ஒரு உரையை வாசித்தார். இதனை தமிழ்நாடு சட்டசபை நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மான விவரம்: ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநர் முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல - அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும்,அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜனவரி மாதம் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்தும் ஆளுநர் தமது நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. முன்னெப்போதையும் விட ஒரு சராசரியான அரசியல்வாதியாகவே தமிழ்நாடு அரசுடன் மல்லுக்கட்டி வருகிறார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அரசுக்கு எதிராக கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2-வது முறையாக ஆளுநர் ரவிக்கு எதிராக மீண்டும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். தீர்மான விவரம்: தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று, தமிழ்நாடு ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள அரசுக்கு தமது மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின் படியான பொறுப்பும், ஜனநாயக ரீதியான கடமையும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, மாண்புமிக்க இந்த சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் அனுமதி அளிக்காமல், காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை இப்பேரவை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள், குறித்து பொதுவெளியில் மாண்புமிகு ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துகள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும் மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு அரசமைப்பு சட்டத்துக்கும் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும் இப்பேரவையின் மாண்பை குறைத்து பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களையும் வலியுறுத்துவது என்றும்
மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும் மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications