நீட் விலக்கு மசோதா: பிப்.8 ஆம் தேதி தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் கூடுகிறது- சபாநாயகர் அப்பாவு
சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் பிப்ரவரி 8ஆம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவருக்கு அந்த மசோதாவை அனுப்பி வைக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரு தினங்களுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழக அரசுக்கு விளக்கம் அளித்தது. இதையடுத்து தமிழக சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக, அதிமுக, புரட்சி பாரம் கட்சிகள் தவிர 10 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு தெரிவிப்பார் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பிப்ரவரி 8- ஆம் தேதி தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் கூடுகிறது. அன்றைய தினம் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். சட்டசபை கூட்டப்பட்டு இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications