அவர் எப்படி பேசலாம்... கொதித்த ஓபிஎஸ்! கீழே உட்காருங்கண்ணே.. பட்டென பாய்ந்த அப்பாவு! என்னாச்சு?
சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை இன்று சட்டசபையில் பேசிய சில விஷயங்களை அதிமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். இதையடுத்து உள்ளே புகுந்த சபாநாயகர் அப்பாவு கோபமாக பதில் அளித்தார்.
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் மற்றும் வழக்கு தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதில் வாதம் வைக்கப்பட்டது.

செல்வப்பெருந்தகை
இதில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை முல்லைப்பெரியாறு வழக்கில் அளிக்கப்பட்ட இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில்தான் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது, இரண்டு மாநில தலைமை செயலாளர்கள் இதற்கு பொறியாளர்களை நியமித்து பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

8 ஆண்டுகள்
8 ஆண்டுகள் தமிழர்கள் கடுமையாக உழைத்து அணையை கட்டினார்கள். 999 ஆண்டுகள் இதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இன்னும் ஒப்பந்த காலம் உள்ளது. தமிழர்கள் ரத்தம், வியர்வையை சிந்தி இந்த கட்டுமானத்தை செய்தனர். காங்கிரஸ் ஆட்சியிலும், அதன்பின் வந்த திமுக ஆட்சியிலும் முல்லைப்பெரியாறு பிரச்சனை இல்லை. 1977வரை திமுக ஆட்சி இருந்தது. அப்போதும் முல்லைப்பெரியாறு பிரச்சனை இல்லை.

தமிழக உரிமை
1979ல்தான் தமிழ்நாட்டின் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது. 152 அடியாக இருந்தது 136 அடியாக குறைக்கப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகமது இதில் கையெழுத்து போட மறுத்துவிட்டார் என்று செய்திகள் இருக்கின்றன. ஆனால் அப்போது.. என்று அவர் வேறு ஒரு வார்த்தையை செல்வப் பெருந்தகை பேசினார்.

நிர்வாகிகள் எதிர்ப்பு
இதற்கு அதிமுக நிர்வாகிகள் கடுமையாக எதிர்த்தனர். அதிமுக நிர்வாகிகள் இதற்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பினர். அவர்களை "உட்காருங்கள்.. உட்காருங்கள்.." என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆனால அதை கேட்காமல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் எழுந்து மத்திய நீர் வள குழுமம் அங்கு பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அதன்பொருட்டே அணையின் நீர் மட்டம் குறைக்கப்பட்டது. இப்போது அதிமுக ஆட்சியில் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டதாக கூறுவது சரியா.

பேச்சு அவை குறிப்பு
அவரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மீண்டும் எல்லோரையும் அமரும்படி அப்பாவு கூறினார்.. உட்காருங்க.. நான் அதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன்.. உட்காருங்கன்னே என்று குறிப்பிட்டார். அதற்கு அதிமுகவினர்.. செல்வப்பெருந்தகை சொன்னதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தனர்.

மோதல்
இதற்கு அப்பாவு கோபம் அடைந்து.. அதுதான் அவை குறிப்பில் இருந்து அவர் பேச்சை நீக்குவதாக கூறிவிட்டேனே. ஏன் மீண்டும் மீண்டும் எழுந்து நின்று பேசுகிறீர்கள். உட்காருங்க என்று கோபமாக பேசினார். இதையடுத்து அதிமுகவினர் அமைதியானார்கள். எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தான் பேசியது தவறு இல்லை. அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டு அமர்ந்தார்.












Click it and Unblock the Notifications