ஜிஎஸ்டி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் இங்கு உள்ளனர்.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு
பிடிஆரை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பாஜக அண்ணாமலை
சென்னை: "ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் குறித்த இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நாம்தான் விளக்க வேண்டும்... ஜிஎஸ்டி என்றால் என்னவென்றே தெரியாத பல எம்பிக்கள் இங்கு உள்ளனர்... ஜிஎஸ்டி என்றால் என்னவென்றே தெரியாத பல எம்பிக்களும் தமிழ்நாட்டில் உள்ளனர்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்
இந்து முன்னணி நிறுவன தலைவர் இராம.கோபாலன் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம், குழுமணியில் அமைக்கப்பட்டு உள்ள அவரது சமாதியில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில துணை தலைவர் பரமன்குறிச்சி வி.பி. ஜெயக்குமார் மற்றும் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்து அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தியபின்பு, அண்ணாமலை பேசியதாவது:

வாழ்வியல் முறை
"சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் பிறந்து பல்வேறு நல்ல விஷயங்களை சந்தித்தவர் ராமகோபாலன். திராவிட கழகத்தை பார்த்தவர்... 1980ல் மீனாட்சிபுரத்தில் 300க்கும் மேற்பட்டோர் மதம் மாறுவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து அதற்குரிய தீர்வையும் கண்டவர்.. "இந்து" என்பது வாழ்வியல் முறை என்று சொன்னவர்.. இல்லை என்றால் இந்த தமிழகம் எங்கே போயிருரக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

கோவில் திறப்பு
ராம கோபாலன் இறந்தபோது முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.. அதில், ராம கோபாலன் கூறிய கருத்துகளை இல்லை என்று கூற முடியாது, அது ஏற்றுக்கொள்ள கூடியது என்றே தெரிவித்திருந்தார்.. இளைஞர்கள் ராமகோபாலனின் சித்தாந்தத்தை கையிலெடுத்து கொள்ள வேண்டும்.. தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் கோவிலை திறங்கள் என்று அமைப்புகளை விட பொதுமக்கள் தான் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்..

ஜிஎஸ்டி
இங்கு ஆர்எஸ்எஸ் குறித்த புரிதல் இல்லை.. அந்த புரிதல் இல்லாமலேயே அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர்... ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் குறித்த இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நாம்தான் விளக்க வேண்டும்... ஜிஎஸ்டி என்றால் என்னவென்றே தெரியாத பல எம்பிக்கள் இங்கு உள்ளனர்" என்றார். இந்நிலையில், பிடிஆர் "முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதில் தர போவதில்லை" என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை
அதில், "முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதில் தர போவதில்லை.. அவர்கள் இருவரையும் முழுவதுமாக புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளேன்... இப்போதில் இருந்து, எனது நேரத்திற்கு மதிப்பில்லாதோருக்குப் பதில் அளிப்பதைத் தவிர்ப்பது எனது கொள்கையாக மாறியிருக்கிறது. ஒரு நிதியமைச்சராக நான் செய்வதற்கு அவ்வளவு இருக்கிறது...

திமுக
அதனால் நான் யாருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். இனி நான், எளிய மக்களின் கேள்விகளுக்கு பதில் தருவேன்" என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்... இதையடுத்து சமீப காலமாக நிலவி வரும் சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் முடிவை நிதியமைச்சர் பிடிஆர் எடுத்துள்ளார்.. இந்த முடிவு அதிமுக, பாஜகவுக்கு மட்டுமல்லாமல், திமுகவில் உள்ள சில சீனியர்களுக்கும் மறைமுக பதிலடியாக அமைந்துள்ளது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications