"உளவு ஆபரேஷன்".. டிஜிபிக்கு பவரே இல்லை.. எல்லாம் "வேறொருவர்" கட்டுப்பாட்டில்.. அண்ணாமலை பரபரப்பு
சென்னை: தமிழ்நாடு உளவுத்துறை மீதும், போலீஸ் மீதும் பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரி புகார்களை வைத்து உள்ளார்.
பாஜக கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தி நகர் அலுவலகத்தில் இருக்கும் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வினோத் என்ற நபர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் ஏற்கனவே இரண்டு முறை இவர் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உளவு புகார்
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக அளித்த பேட்டியில், நான் பொதுவாக கட்சி பாதுகாப்பு, என்னுடைய பாதுகாப்பு பற்றி பேச மாட்டேன். ஆனால் திமுகவினர் ஆட்சிக்கு வந்ததும் என்னுடைய பாதுகாப்பை குறைத்தனர். கட்சி அலுவலகத்திலும் பாதுகாப்பை குறைத்துவிட்டனர். இப்படி வரிசையாக பாதுகாப்பை குறைத்து வருகின்றனர். அப்படித்தான் நீங்கள் பழி வாங்க துடிக்கிறீர்கள் என்றால் பழி வாங்குங்கள் பார்த்துக்கொள்ளலாம். என்னுடைய தொலைபேசி ஒட்டுகேட்கப்படுகிறது. போனை bug செய்கிறார்கள். பாஜக கட்சி அலுவலகத்தின் இரண்டு பக்க லேனிலும் பாதுகாப்பு இருக்கும்.

பாதுகாப்பு நீக்கம்
இப்போது அந்த இரண்டு பக்க பாதுகாப்பையும் நீக்கி இருக்கிறார்கள். இரண்டு பக்கமும் போலீஸ் நிற்கும். இப்போது இல்லை. நீங்கள் இந்த முடிச்சை கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு மேல் சில விஷயங்களை நான் பேசினால் நன்றாக இருக்காது. நாங்கள் ஒன்னும் கோழை கிடையாது. அண்ணாமலை எதிர்த்து பேசுகிறான் என்று இப்படி எல்லாம் செய்கிறார்கள். நான் என்ன பேசினாலும் உளவுத்துறை அதை ஒட்டுக்கேட்கும்.

டிஜிபிக்கு பவர் உள்ளதா?
அவர்கள் ஒரு வாட்ஸ் ஆப் குழு வைத்துள்ளனர். அதில் நான் பேசியதை பரப்புவார்கள். அண்ணாமலை இதைத்தான் பேசினார்கள் என்று அதை செய்தியாக வெளியிடுகிறார்கள். இதுதான் தமிழ்நாடு உளவுத்துறையின் புதிய வேலை. நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். தமிழ்நாட்டில் உளவுத்துறை போலீசை விட அதிக பவர் கொண்டு இருக்கிறது. போலீஸ் டிஜிபிக்குதான் அதிக பவர் இருக்க வேண்டும், அதுதான் முறை.

ஹெட் ஆப் தி போலீஸ் யார்?
ஆனால் போலீஸ் டிஜிபியை உளவுத்துறையின் ஏடிஜிபிதான் அதிக பவர் கொண்டவர் போல இருக்கிறார். அவர்தான் ஹெட் ஆப் தி போலீஸ் போல செயல்படுகிறார். இதை மிகுந்த மிகுந்த வருத்தத்துடன் செயல்படுகிறேன். இந்த ரோல் மாறும் போது அது சிக்கலாகிவிடும். ஏனென்றால் உளவுத்துறை என்பது அரசியல் சார்பாக செயல்பட கூடாது. இத்தனை நாட்கள் இதை பேச வேண்டாம் என்று நினைத்தேன். பேசுவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.

உளவுத்துறை
எப்போது உளவுத்துறை தலைவர் போலீசின் முடிவுகளில் தலையிடுகிறாரோ அப்போதுதான் போலீஸ் அரசியல் சார்புடையதாக மாறும். அரியலூர் மாணவி வழக்கை தமிழ்நாடு போலீஸ் சாரியாக விசாரிக்காமல் போக காரணமே உளவுத்துறைதான். அங்கு எஸ்.பி கொடுத்த பேட்டி எல்லாம் உளவுத்துறை சொல்லிக்கொடுத்து வந்த பேட்டிகள்தான். இதெல்லாம் சிலரின் தனிப்பட்ட பர்சனல் காரணங்களால் உளவுத்துறை செய்யும் உத்தரவு. தமிழ்நாடு எங்கே செல்லும் என்று தெரியவில்லை.
Recommended Video

உளவுத்துறையின் ஏடிஜிபி பவர்
உளவுத்துறையின் ஏடிஜிபிதான் இப்போது போலீஸ் எஸ்பிக்களுக்கு உத்தரவு போடுகிறார். பிறகு ஏன் டிஜிபி பதவி இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர்தான் இதற்கு பதில் தர வேண்டும். இவர்கள் எம்பிக்கள் போன் டேப்பிங் பற்றி பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மிக அதிக தொழில்நுட்பம் கொண்ட state of the art உளவு கருவிகளை வைத்து உளவு பார்க்கிறார்கள். இதெல்லாம் உள்துறைக்கு சென்று சர்வே நடத்த வேண்டும்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?











Click it and Unblock the Notifications