ஈவிகேஎஸ் இளங்கோவன் இதை செய்யட்டும், அப்புறம் பாருங்க ஓட்டு எல்லாம் எங்களுக்கு வந்துவிடும்: அண்ணாமலை
அதிமுக கூட்டணியின் பிரச்சார பீரங்கியே ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசத் தொடங்கினால், நிச்சயம் எங்கள் கூட்டணியின் வாக்குகள் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக சார்பாக ஆனந்த் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல் அதிமுகவுக்கு ஆதரவாக தமாகா, பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆதரவாக உள்ளனர்.

அண்ணாமலை பேட்டி
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு அறிமுகம் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பாஜக சார்பாக கட்சியின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார்.

இடைத்தேர்தல் பிரச்சாரம்
பாஜகவினர் அனைவரும் உயிரை கொடுத்து உழைப்போம். நிச்சயம் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் தென்னரசு நிச்சயம் வெற்றிபெறுவார். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டு,. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஏற்கனவே பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய பின், நானும் ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன். அதேபோல் கர்நாடகா தேர்தல் பணிகள் இருக்கிறது. அதற்கேற்ப தேதிகள் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

திமுகவுக்கு பயம்
தொடர்ந்து, களத்தில் ஆளுங்கட்சி மீது எவ்வளவு அதிருப்தி இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியும். இதுவொரு இடைத்தேர்தல் தான். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக ஆட்சியமைத்து 22 மாதங்கள் முடிவடைந்த நிலையில், திமுகவின் அனைத்து தலைவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் பணியாற்றி வருகிறார்கள். ஒரு ஆளுங்கட்சி, இடைத்தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் நடைபெற்றது கிடையாது. இதில் இருந்தே திமுக பயந்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
அதேபோல் 39 லோக்சபா தொகுதியில் திமுக 38 தொகுதியில் வெற்றிபெற்றது. அதில் தோல்வியடைந்த ஒரே வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். அவர் வாயை திறந்தாலே போதும். அனைத்து வாக்குகளும் எங்களுக்கு நிச்சயம் வரும். எங்கள் பிரச்சாரம் பீரங்கியே ஈவிகேஎஸ் இளங்கோவன் தான். இந்த தேர்தலில் சாமானியர் அரசியல் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே எங்களின் இலக்கு. ஓபிஎஸ் அண்ணனுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அதேபோல் 39 லோக் சபா தொகுதியில் திமுக 38 தொகுதியில் வெற்றிபெற்றது. அதில் தோல்வியடைந்த ஒரே வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். அவர் வாயை திறந்தாலே போதும். அனைத்து வாக்குகளும் எங்களுக்கு நிச்சயம் வரும். எங்கள் பிரச்சாரம் பீரங்கியே ஈவிகேஎஸ் இளங்கோவன் தான். இந்த தேர்தலில் சாமானியர் அரசியல் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே எங்களின் இலக்கு. ஓபிஎஸ் அண்ணனுன் களத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications