பாடை + ஜனாசா + காஃபின்.. மும்மத முறையில் இறுதிச்சடங்கு! ஒரு ஆளுநர் என்றும் பாராமல் -அண்ணாமலை காட்டம்
ஆளுநருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய மனிதநேய மக்கள் கட்சிக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பாக மூன்று மதங்களின் முறையிலும் இறுதிசடங்கு நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
அதேபோல் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று பதில் அளித்தார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதமானது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அமமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் விமர்சித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

சவப்பெட்டியுடன் ஊர்வலம்
இந்த நிலையில் தமிழக ஆளுநரை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஆளுநர் மளிகையை நோக்கி சவபெட்டியுடன் ஊர்வலமாக செல்லும் போராட்டம் சின்னமலை ராஜிவ் காந்தி சிலை அருகே நடந்தது. அதில் மனித நேய மக்கள் கட்சியினர் சவப்பெட்டிகளை தூக்கிக்கொண்டு கோஷம் எழுப்பினர். அதேபோல் ஆளுநருக்கு பாடை கட்டி கோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் மூன்று மதங்களின் முறையில் ஆளுநருக்கு இறுதிசடங்கு நடத்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்ணாமலை கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் ஆளுநரை தாக்குவதற்கு கூட்டணி கட்சியினரை அனுமதிப்பதன் மூலம் திமுக அரசு மோசமான முன்னுதாரணமாக உள்ளது. அதேபோல் மக்களை குழப்பி, தவறாக வழிநடத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளதாக விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
வரும் 20ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதனை மீண்டும் ஆளுநர் கிடப்பில் போட்டால், அதுகுறித்து அந்த சூழலில் முடிவு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications