திமுக vs பாஜக: ஆடு வேட குள்ள நரி, சாத்தான்கள், ரத்தகாட்டேரிகள், ஓநாய்கள்.. ரத்த பூமியான ட்விட்டர்!
சென்னை: கோவை சம்பவத்தை முன்வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்ததற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார்.
கோவை சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அத்துடன் கோவை சம்பவத்தை ஒப்பிட்டு, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை தொடர்பான செய்தி வெளியிட்ட ஊடகங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை தமது ட்விட்டர் பதிவுகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என வரிக்கு வரி விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலடியும் தந்திருந்தார்.

ஆடு வேடத்தில் குள்ள நரிகள்
அண்ணாமலைக்கு ட்விட்டரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தந்த பதில்: மிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.

ரத்தவெறி சாத்தான்கள்..
கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன. அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். 'நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க' என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டிருந்தார்.

ரத்தக்காட்டேரி
இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அளித்துள்ள பதில்: தமிழ்நாட்டில் மத அடிப்படைவாதத்தை அரங்கேற்றி விட முடியாதா? அதனால் வன்முறைகளை நிகழ்த்திவிட முடியாதா என்ற ரத்தக்காட்டேரிகளின் வெறியை அடக்கமுடியாத சில ஓநாய்களின் மலிவு அரசியல், போலி மதசார்பின்மை என்ற பித்தலாட்ட ஓட்டு வங்கி அரசியல் ஆன்மீக தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.

காலம் பதில் சொல்லும்
கோவையில் 'சம்பவம்' என்று சொல்லும் நிலையில் சிலிண்டர் விபத்து என்றே சொல்வதன் மர்மம் என்ன? மக்களிடம் நடைபெற்றுள்ள பயங்கரவாத சம்பவத்தை மூடி மறுப்பதேன்? சாதாரண சிலிண்டர் வெடிப்பிற்கு உ பா சட்டம் ஏன்? அரசு நிறுவனங்கள் முறையாக செயல்படவில்லையெனில் விமர்சனங்கள் எழத்தான் செய்யும். சட்ட நடவடிக்கைகள் யார் மீது எப்போது பாயும் என்று காலம் பதில் சொல்லும். இவ்வாறு நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications