தமிழ்நாடு பாஜகவின் புதிய ஆயுதம்- உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயனும்- அமித்ஷாவுக்கு கடிதம்!
சென்னை: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜகவில் இருந்து புதிய கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக ஊடகப் பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ் பிரசாத் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பிய கடிதம்:

தமிழகத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தின் புனிதத்தை இழிவு படுத்தும் வகையில் சனாதன தர்மம் குறித்து தவறான, ஆபத்தான, கருத்துக்களை வெளியிட்டு தேச ஒற்றுமைக்கும், மக்களின் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி மத வேற்றுமையை உருவாக்கி மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
மானுட தத்துவம்: இந்து மதத்தின் புனிதத்தை விளக்கக்கூடிய சனாதன தர்மம் மனித வாழ்வியலின் அற்புத நெறிமுறைகளை விளக்கும் பெருமைமிகு உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய மானுட தத்துவம். இது குறித்து படித்து தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு கருத்துக்கள் கூறலாம்.
சுய விளம்பரம்: சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் சனாதன தர்மம் குறித்து எதுவும் தெரியாமல், உள்நோக்கத்துடன் மத உணர்வுகளை தூண்டிவிட்டு மாற்று மதத்தினர் வாக்குகளை பெற சமூகத்தின் அமைதியை கெடுத்து சாதி, மத வேற்றுமைகளை உண்டாக்க முயலும் திமுக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

மத்திய அரசு விசாரணை தேவை: அரசியல் சுயநலத்திற்காக இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதையும், இந்துக்களிடைய பிரிவினைவாதத்தை தூண்டுவதையும் இனி அனுமதிக்க கூடாது. தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், மதக் கலவரத்தை , வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வரும் அமைச்சர் உதயநிதி மீதும், மத வேற்றுமையை உருவாக்குவதில் பரப்பப்பட்ட இந்த பிரிவினைவாத செய்தியின் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
தே.பா. சட்டம்: மேலும் அமைச்சர் உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேச ஒற்றுமைக்கு குந்தகம் நடத்த ஏதேனும் சரி நடந்ததா என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications