வெள்ளை அறிக்கை பற்றி பேசுவேன்.. எல்லா கேள்விக்கும் பதில் வரும்.. சட்டசபைக்கு வெளியில் ஓபிஎஸ் பேட்டி!
சென்னை: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு ஆதாரங்களுடன் விளக்கம் அளிப்பேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டசபையில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் இன்று காலையில் சட்டசபை தொடங்கியதுமே அமளியில் ஈடுபட்டனர்.
பிடிஆர் உரைக்கு முன்பாக தங்களை பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர் அப்பாவு அதிமுகவினரை பேச அனுமதிக்க காரணத்தால் அமளியில் ஈடுப்பட்ட கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு
சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார். வெள்ளை அறிக்கை குறித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், வெள்ளை அறிக்கையை திமுகவினர் வெளியிட்டு இருக்கிறார். அதில் இருக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும், ஒவ்வொரு வரிக்கும் நான் சட்டசபையில் விளக்கம் அளிப்பேன்.

நிதி நிலை
அனைத்திற்கும் நான் விளக்கமாக பதில் அளிப்பேன். சட்டசபையில் பொறுமையான, உண்மையான விளக்கத்தை கொடுப்பேன், அப்போது எல்லாம் புரியும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் வரும் . ஏற்கனவே 10 ஆண்டுகளில் நான் நிறைய முறை நிதி நிலை பற்றி பேசுவேன். ஒவ்வொரு ஆண்டும் இதை பற்றி நாங்கள் பேசி இருக்கிறோம்.

வெளியே வரும்
இதுவரை நான் சொல்லாத சில விவரங்களை பேசுவேன். மத்திய மாநில நிதி நிலவரத்தை நான் பேசும் போது அனைத்து உண்மையும் வெளியே வரும். சட்டசபையில் இதை பற்றி ஆதாரங்களுடன் விளக்கமளித்து பேசுவேன், என்று முன்னாள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

நிதி நிலை
இரண்டு நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து விரிவாக விளக்கி இருந்தார். தமிழ்நாட்டின் மொத்த கடன் 2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் பொதுக்கடன் மட்டும் பொதுக்கடன் 26.69 சதவிகிதமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் மொத்தம் ரூ.2,63,976 கடன் உள்ளது என்றுகுறிப்பிட்டு இருந்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications