குட்நியூஸ்.. விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் "டைடல் பார்க்ஸ்".. பிடிஆர் அறிவிப்பு!
சென்னை: விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐடி புரட்சியை ஏற்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னோடி. சென்னையில் முதல் ஐடி பூங்காவை கொண்டு வந்து இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருந்தது. ஆனால் அதன்பின் ஐடி பூங்காக்கள் பெரிய அளவில் சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவில்லை.
கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில நிறுவனங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டாலும் முழுமையாக சென்னையை போல பெரிதாக எங்கும் பல ஐடி நிறுவனங்கள் வரவில்லை. இந்த நிலையில்தான் இன்று பட்ஜெட் உரையில் புதிய டைடல் பூங்காக்கள் குறித்த அறிவிப்பை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

பட்ஜெட்
இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பட்ஜெட் உரையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்கல பூங்கா, பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் ரூ4,500 கோடியில் சர்வதேச அறைக்கலன் தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும். விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்

பொயின்கா
ஓசூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும். தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும். ரூ225 கோடியில் கோவையில் 500 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். ரூ165 கோடியில் 2 நிதிநுட்ப நகரங்கள் உருவாக்கப்படும். இதற்காக நிதிநுட்ப கொள்கை வெளியிடப்படும்.

சிப்காட்
பின்தங்கிய 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். சிறு, குறு தொழில் சிக்கல்களை ஆராய குழு அமைக்கப்படும்
Recommended Video

சுரங்க கொள்கை
சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நீடித்த நிலையான சுரங்க கொள்கை உருவாக்கப்படும். சுரங்க வருமானம் உயர்த்தப்படும். அரியலூர் -பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ10கோடியில் புவியியல் புதைவடிவ பூங்கா அமைக்கப்படும். மணப்பாறை, தேனி, திண்டிவனத்தில் உணவு பூங்காக்கள் நிறுவப்படும். இங்கு உணவு பொருள் உற்பத்திக்கு கவனம் செலுத்தப்படும், என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications