தமிழக பட்ஜெட்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும்? பிடிஆர் முக்கிய அறிவிப்பு
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தமிழகத்தின் நிதிநிலை சீராகும்போது செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்தார். காலை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், உடனே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று பட்ஜெட் ஜார்ஜ் கோட்டையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது.

வாக்குறுதி
இன்று குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இதை பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதி ஆகும் இது. திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தொடங்கப்படவில்லை
ஆனால் இன்று பட்ஜெட்டில் அதை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மாறாக, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தமிழகத்தின் நிதிநிலை சீராகும்போது செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையை பெற பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட்டின் போதே அறிவித்து இருந்து குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல்
முன்னதாக இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டது. , பெண்களின் நலன் கருதி வேகமாக இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த வாக்குறுதி பற்றிய விவாதங்கள் மிக கடுமையாக எழுந்தது. இந்த நிலையில்தான் கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

எதிர்பார்ப்பு
மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. சில மாற்றங்களுடன் இந்த திட்டம் இன்று அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேஷன் கார்டில் தகுதி அடிப்படையில் பணம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video

ரேஷன்
அதன்படி அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரேஷன் கார்டில் தகுதி அடிப்படையில் பணம் அளிக்க உள்ளனர். அதன்படி அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications