ரூ.275 கோடியில் 3 நகரங்களில் மாணவியர்கள் விடுதி.. பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டின் 3 நகரங்களில் ரூ.275 கோடியில் மாணவியர்கள் விடுதி அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதிலும் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் மாணவியர்கள் விடுதி அமைக்கப்படும் என்று கூறியுள்ள தங்கம் தென்னரசு, புதிதாக ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மகளிருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவிகிதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.
இதற்காக மட்டும் ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் கொடுக்க வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் ரூ.275 கோடியில் 3 மாணவியர்கள் விடுதி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications