"எப்படி இருக்கு".. பூரித்து கேட்ட ஸ்டாலின்.. திடீர்னு கண்கலங்கிய பிடிஆர்.. இன்றைய பட்ஜெட் ஸ்பெஷல்ஸ்
நிதியமைச்சர் பிடிஆர் தன் தந்தையை இன்று நினைவுகூர்ந்து பேசினார்
சென்னை: இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், தன்னுடைய முப்பாட்டனார், பாட்டனார், மற்றும் தந்தையை நினைவு கூர்ந்து தழுதழுத்தபடியே உரையை தொடங்கி வைத்தார்.
2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் தொடங்கியது.
நிறைய சிறப்புகளை இந்த பட்ஜெட் தாங்கி வந்துள்ளது.. தமிழ்நாட்டில் முதன் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் இப்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. சட்டப்பேரவையில் எல்லாமே கம்ப்யூட்டர் கணினி மயமாகியுள்ளன.

முதல் பட்ஜெட்
சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முதல் தமிழக பட்ஜெட் இதுவாகும்.. முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினின் முதல் பட்ஜெட் இதுவாகும்.. 10 வருடம் கழித்து, திமுக தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இது.. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாமல் நடத்தப்படும் முதல் பட்ஜெட் இது. அதனால்தான் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பார்ப்புகள் எகிறின.

நெகிழ்ச்சி
நிதியமைச்சர் பிடிஆர் தன்னுடைய உரையை இன்று துவக்கும்போதே நெகிழ்ச்சியுடன்தான் ஆரம்பித்தார்.. அப்போது அவர் சொல்லும்போது, "இந்த கடினமான இக்கட்டான சூழ்நிலையில் நிதிநிலை அறிக்கையை தயார் செய்ய உதவிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள்.. எங்களின் முன்னோடிகளான மறைந்த முதல்வர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி நிதியமைச்சர் க.அன்பழகன் ஆகியோருக்கு நன்றிகள்.

அப்பா
அவர்களின் வழியில் நானும் நடப்பேன்.. எனது பாட்டனார் மறைந்த நீதிக்கட்சி கொறடா பி.டி.ராஜன், தந்தை மறைந்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அவர்களுக்கும் நன்றிகள்.. அவர்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை.. எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த முதல்வர், என்னுடன் பணியாற்றிய அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றிகள்.. சட்டப்பேரவை சபாநாயகர் நிதிநிலை அறிக்கைக்கு அவையின் அனுமதியை பெற்றுத்தர வேண்டும் என்று கண்கலங்கிப்படி உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

மரியாதை
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தமிழக ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் உட்பட அமைச்சர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தை சுற்றி வலம் வந்தும் , நினைவிடத்தில் ரோஜா இதழ்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர். அமைச்சர் நேரு, பொன்முடி, எஸ்.ரகுபதி , சேகர்பாபு , அன்பில் மகேஷ், அனிதா ராதாகிருஷ்ணன், ஏ.வா வேலு உள்ளிட்டவர்களும் முதலமைச்சருடன் வருகை தந்து மரியாதை செலுத்தினர்.
Recommended Video

புன்னகை
நினைவிடத்தை வலம் வந்த முதலமைச்சர் அங்கிருந்த செய்தியாளர்களை நெருங்கி வந்து "நிதிநிலை நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கு? என்று ஆர்வத்துடன் கேட்டார்... அதை சற்றும் எதிர்பாராத செய்தியாளர்கள், நல்லா இருக்கு சார் என்று பதிலளித்தனர்.. அதை கேட்டு புன்னகைத்தவாறு முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications