மார்ச் 24ஆம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
சென்னை: வரும் மார்ச் 24ஆம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திமுக அரசு 2022-23 முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழு பட்ஜெட் என்பதால் இதன் மீது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று காலை சட்டசபையில் அமைச்சர் பிடிஆர் பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்யத் தொடங்கினார். அப்போது அப்போது ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டு தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அமைச்சர் பிடிஆர் தனது உரையைச் சற்று நேரம் நிறுத்தினார். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பின்னர், பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்து வாசித்தார்.
21 மொழிகளில் பெரியார் சிந்தனை தொகுப்பு, பெண் கல்விக்கு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மேலும், அவர் உலக முதலீட்டாளர்களாக என்று கூறி, பட்ஜெட் உரையில் சில பத்திகளை ஆங்கிலத்திலும் வாசித்தார்.
அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் மார்ச் 24ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவ எடுக்கப்பட்டுள்ளது.
நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், வரும் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதில் மார்ச் 21,22,23 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி பதில் அளிக்கிறார் என்றும் அன்றைய தினம் கேள்வி பதில் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications