Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல கோடி கடன்.. வருவாய் இழப்பு.. பொருளாதார சரிவுக்கு இடையிலும் பெட்ரோல் விலை குறைப்பு.. புள்ளி விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளது. வெள்ளை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அதிக அளவில் கடன் சுமையில் சிக்கி இருப்பதாக நிதி அமைச்சர் கூறி இருந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதி நிலவரம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த திங்கள் கிழமை வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருந்தார். தமிழ்நாட்டில் கடன் சுமை குறித்தும் வருவாய் இழப்பு குறைத்தும் விரிவாக இதில் விளக்கி இருந்தார். இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டின் போது தமிழ்நாட்டின் வரி விதிப்பு முறை குறித்தும் பேசி இருந்தார்.

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து வெள்ளை அறிக்கையில் பிடிஆர் தெரிவித்து இருந்தார். இதனால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரிகள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன, நிதி நிலையை காரணம் காட்டி சில பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் நிலை ஏற்படலாம் என்று பல பேச்சுக்கள் எழுந்தன.

மின்சாரம்

மின்சாரம்

முக்கியமாக மின்சாரத் துறை, போக்குவரத்து துறை பெரிய அளவில் நஷ்டத்தில் இயங்குகிறது. இதனால் இந்த குறிப்பிட்ட துறைகளில் மட்டும் தனியார் முதலீடுகள் அல்லது விலையேற்றம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் நிதி அமைச்சர் அந்த அளவிற்கு கடன் சுமை குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையில் வெளியிட்டு இருந்தார். இவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற சில புள்ளி விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

பொது கடன்

பொது கடன்

தமிழ்நாட்டின் பொதுக்கடன் மட்டும் பொதுக்கடன் 26.69 சதவிகிதமாக உள்ளது. 2016-2021 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை மட்டுமே ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 10 வருடங்களில் தமிழ்நாடு எவ்வளவு பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த கடன் 2021 - 22ம் ஆண்டின் படி ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.

முதலீடு

முதலீடு

1999-2000 - ரூ.18,989 கோடி கடன் இருந்தது. இது 2000-2001 - ரூ.28,685 கோடி ஆக உயர்ந்தது.2011-2012 - ரூ.1,03,999 கோடி2015-2016 - ரூ.2,11,483 கோடியாக இந்த கடன் உயர்ந்தது. கடந்த 2017-2018 - ரூ.3,14,366 கோடியாக இருந்தது. 2021ம் ஆண்டில் மொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் முதலீடு செய்ய கடன் வாங்குவார்கள். ஆனால் இங்கு வருவாய் பற்றாக்குறையை சரி செய்வதற்காக கடன் வாங்கி உள்ளனர். அதிக வட்டிக்கு கூடுதல் கடன் வாங்கி உள்ளனர்.

மொத்த கடன்

மொத்த கடன்

இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் மொத்தம் ரூ.2,63,976 கடன் உள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது 3.16 சதவிகிதமாக உள்ளது. இதற்கு முன் தமிழ்நாடு இவ்வளவு பெரிய பற்றாக்குறையை சந்தித்தது கிடையாது என்று பிடிஆர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரி அதிகரிக்கப்படும், முக்கியமான விலைவாசி உயர்த்தப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று இவ்வளவு கடனிலும் எந்த விதமான வரியும் உயர்த்தப்படவில்லை.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

அதோடு தனியார் முதலீடு குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.தற்போது பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சராசரியாக தற்போது பெட்ரோலின் அடிப்படை 39 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசின் கலால் வரி மட்டும் 39 ரூபாயாக உள்ளது.

குறைப்பு

குறைப்பு

இந்த நிலையில் மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி 24 ரூபாய் வரை விதிக்கப்பட்ட நிலையில் தற்போதுமதிப்புக்கூட்டு வரி 21 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 99 ரூபாய் என்ற விலையை அடையும் வாய்ப்பு உள்ளது. வருவாய் இழப்பு இதனால் அதிகம் ஏற்படும் என்று தெரிந்தும் தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையை குறைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+