1100 எண்ணை அழைத்தால்.. குறைகள் தீர்க்கப்படும்.. முதல்வர் தொடங்கி வைத்த சபாஷ் திட்டம்!
சென்னை: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அது போல் கீழடி அகழாய்வு பணிகளையும் முதல்வர் குறைதீர்க்கும் திட்டத்தையும், பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
அதிமுகவின் 5 ஆண்டு கால ஆட்சி வரும் மே மாதம் நிறைவடைகிறது. இதனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்தான் வரும் சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இப்போது தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 6 மாத இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடக்கும்.
இந்த கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு இறுதி வடிவமும் கொடுக்கப்படவுள்ளது. அது போல் துறை ரீதியான புதிய திட்டங்கள், ஏற்கெனவே தொடங்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை, தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம்.
இந்த மாதம் 22-ஆம் தேதிக்கு பிறகு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் ஏழாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணெலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். குடிநீர் பிரச்சினை, சாலைப் பிரச்சினை, உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை உடனடியாக தீர்க்கப்படுவதற்காக உருவான திட்டம் இது.
1100 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவித்தால், பிரச்சினைகள் உடனே தீர்க்கப்படும் திட்டமான முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் 12,110 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications