• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
LIVE

News Updates Today :மத்திய தொகுப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு- கமல்ஹாசன் வரவேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

Tamil Nadu extends Corona lock down till August 9  Live Updates

Newest First Oldest First
12:35 PM, 31 Jul
நிலச்சரிவில் தாய், தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்த கோபிகா.. பிளஸ் 2வில் சாதனை- கமல் வாழ்த்து
கடந்த ஆண்டு நிலச்சரிவில் தாய் தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்தார் கேரள மாணவி கோபிகா. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இழப்பின் பெருவலியைப் பொறுத்துக் கொண்டு உழைத்திருக்கிறார். இந்த மனவலிமை போற்றுதலுக்குரியது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
12:22 PM, 31 Jul
கன்னியாகுமரி- நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி-  நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மண்ணின் கனிமவளக் கொள்ளைக்கு மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி "கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடத்தினர்.
12:17 PM, 31 Jul
சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளை வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது: சீமான்
சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருட்டிணன் நகரில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வரும் ஆதித்தமிழ்க்குடிகளின் வீடுகளை அதிகாரத்தின் துணைகொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேற்றும் ஆளும் திமுக அரசின் கொடுஞ்செயல் அதிர்ச்சியளிக்கிறது. மண்ணின் மக்களை‌ ஒட்டுமொத்தமாக பூர்வீக நிலத்தைவிட்டு வற்புறுத்தி வெளியேற்றி, அப்புறப்படுத்தும் இக்கொடுங்கோல்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
12:02 PM, 31 Jul
தொலைதூர கல்வி பட்டதாரிகள் அரசு துறையில் பதவி உயர்வு பெற முடியாது- சென்னை ஹைகோர்ட்
தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து.தமிழக பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், தொலைதூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளதால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிகவரித் துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, திறந்த நிலை பல்கலைக்கழகம் அல்லது தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
11:38 AM, 31 Jul
மருத்துவ படிப்பு: மத்திய தொகுப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு- கமல்ஹாசன் வரவேற்பு
மருத்துவப் படிப்பிற்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. நீட் தேர்வு ரத்து, மத்திய தொகுப்புமுறையை கைவிடுதல் என நாம் எட்ட வேண்டிய இலக்குகள் இன்னும் இருக்கின்றன என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
11:08 AM, 31 Jul
உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தில் கிராமவாசியை மீட்ட மீட்பு படையினர்
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது. அங்கு சிக்கி தவித்த கிராமவாசியை உயிரை பணையம் வைத்து மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
10:46 AM, 31 Jul
திருப்பூரில் இரும்பு ராடு வைத்து அரசு பஸ் இயக்கம் - பயணிகள் அதிர்ச்சி
திருப்பூரில் இரும்பு ராடு வைத்து அரசு பஸ் இயக்கம் - பயணிகள் அதிர்ச்சி
திருப்பூரில், அரசு பேருந்தில், கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி பொருத்தி பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசுப் பேருந்து சேவைகளும் முழுவதுமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குமுளி - திருப்பூர் இடையே இயக்கப்படும், திருப்பூர் பணிமனைக்குட்பட்ட அரசு பேருந்தின் கியர் ராடு பழுதடைந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாயை பொருத்தி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, அந்த பேருந்து இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கும் அரசு பேருந்து, இரும்பு பைப் உதவியுடன் இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
10:33 AM, 31 Jul
நகைக் கடையில் திருடும் பெண்- பரபர சிசிடிவி காட்சிகள்:
ஜே ஜே நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் பெண் ஒருவர் 3 சவரன் நகையை திருடன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சென்னை முகப்பேர் வளையாபதி சாலை உள்ள லஷ்மி ஜூவல்லரியின் உரிமையாளர் ப்ரீத்தம் குமார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக நகை கடை வைத்து நடத்தி வருகிறார் கடந்த 26 ஆம் தேதி 3 மணி அளவில் கடையில் பணிபுரியும் ஊழியரான கைலாஷ் என்பவர் பெண் வாடிக்கையாளர் 3 சவரன் எடை கொண்ட ஆறு நகைகளை காண்பித்து வைக்கிறார் அதில் ஒன்றை தேர்வு செய்த அந்தப் பெண்மணி ஏடிஎம் இருந்து பணம் எடுத்து வருவதாக சென்றுவிடும் நேரத்தில் ஆறு செயினில் ஒரு செயினை திருடிக்கொண்டு சென்று விடுகிறார். இது தொடர்பாக கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தாட்சாயினி வயது 47 என்கிற பெண் ஒருவர் மறைத்து வைத்து எடுத்துக் கொண்டு செல்கிறார். இது தொடர்பாக ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த பின் சிசிடிவி ஆய்வு செய்த போலீசார் தாட்சாயினி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இவரது கணவர் சந்திரகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.
10:31 AM, 31 Jul
புதுச்சேரி அரசு அலுவலகம் ஒன்றில் உயர் அதிகாரியை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி:
புதுச்சேரி அரசு அலுவலகம் ஒன்றில் உயர் அதிகாரியை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி:
புதுச்சேரி கோரிமேட்டில் மதர் தெரேசா சுகாதார கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கே பணியாற்றும் அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் பற்றி சிலர் அவதூறாக மொட்டை கடுதாசி சுகாதாரத் துறைக்கு அனுப்பி உள்ளனர். இதுதொடர்பாக அவர் அலுவலகத்தில் கேட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடைநிலை ஊழியர் ராமன் என்பவர் மீது சந்தேகம் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராமன் உயரதிகாரி என்று கூட பார்க்காமல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜை அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் சுகாதார அறிவியல் நிறுவனம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
10:21 PM, 30 Jul
கொரோனா அதிகரிப்பு: சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகம், அங்காடிகள் செயல்பட தடை
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட 9 இடங்களில் வணிக வளாகம், அங்காடிகள் செயல்பட தடை நாளை முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
8:53 PM, 30 Jul
தமிழ்நாட்டில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா அதிகரிப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா அதிகரிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 1947 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 215 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 2-வது நாளாக வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது
8:41 PM, 30 Jul
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை - டிஜிபி சைலேந்திரபாபு சூப்பர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு  வார விடுமுறை - டிஜிபி சைலேந்திரபாபு சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். வார ஓய்வு தேவைப்படாத காவலர்கள் பணியில் இருந்தால் அவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.
7:03 PM, 30 Jul
ஹிமாச்சல பிரதேசத்தில் கன மழையால் ஒரு மலையே பெயர்ந்து விழும் பகீர் வீடியோ:
ஹிமாச்சல் பகுதியில் தொடர் கனமழை காரணமாக மலையின் ஒரு பகுதியே பெயர்ந்து விழும் காட்சிகள் வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு வருவதும், நிலச்சரிவுகள் ஏற்படுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பத்வாஸ்க்கு எனப்படும் பகுதியில் இருக்கும் மிகப் பெரிய மலையில் வெடிப்பு ஏற்பட்டு ஒரு பகுதியே சரிந்து விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பீதியை ஏற்படுத்தி உள்ளது . இதேபோல் இமாச்சலில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பாலங்கள் உடைந்து விடுவதும் நிகழ்ந்துள்ளது.
6:57 PM, 30 Jul
கோவை நகரத்தில் நடுத்தர வயது ஆண் ஒருவர், தனது பைக் முன்புறத்தில் செல்போனை வைத்துக் கொண்டு, இன்டர்நெட் மூலமாக டிவி சீரியல் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சற்று கவனம் பிசகினாலும் விபத்து ஏற்பட்டு அவருக்கும், சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து இனியாவது இப்படிப்பட்டவர்கள் திருந்துவார்களா?
6:31 PM, 30 Jul
கொரோனா அதிகரிப்பது அச்சமூட்டுகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா அதிகரிப்பது அச்சமூட்டுகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது: நேற்று கொரோன பாதிப்பு உயர்ந்துள்ளது, இது அச்சத்தை தருவதாக உள்ளது. சென்னை , கோவை , கடலூர் , உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மற்றும் நாங்களும் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். கொரோனா தொற்று பாதித்தவர்களை வீடுகளில் சிகிச்சை எடுக்கமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு அறிவித்து உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
6:26 PM, 30 Jul
சேலம் பகீர் விபத்தில் காயமடைந்த வாலிபர் மரணம்:
சேலம் பகீர் விபத்தில் காயமடைந்த வாலிபர் மரணம்:
சேலத்தில் நெடுஞ்சாலையில் கடந்த 25ம் தேதி நடைபெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் கோவையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அஜித்குமார் இன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்த வழக்கில் போதையில் காரை ஓட்டிவந்த சதீஷ்குமார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6:14 PM, 30 Jul
ஆவடியில் ரூ.1 கோடி மதிப்பிலான சாலை பணி, மின் மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கம்:
ஆவடியில் ரூ.1 கோடி மதிப்பிலான சாலை பணி, மின் மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கம்:
ஆவடி தொகுதிக்குட்பட்ட 14,16,17 வது வார்டுகளில் புதிய தாரசாலைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இதனை தொடர்ந்து ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான நாசர் அப்பகுதியில் சுமார் 1 கோடி மதிப்பிலான புதிய தார் சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்து துவக்கி வைத்தார். மேலும் தலா 12 லட்சம் மதிப்பிலான 5 மின் மாற்றிகள் பொருத்தும் பணிகளையும் துவக்கி வைத்தார்.உடன் பகுதி பொறுப்பாளர்கள் ஜி.ராஜேந்திரன்,பேபி.சேகர் அவர்கள் வட்ட கழக செயலாளர்கள் மற்றும் வார்டு நிர்வாகிகள், ஏராளமான‌ பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

English summary
Tamil Nadu News Updates Live in Tamil: Check the live and latest news updates in Tamil Nadu and all over india covering all the important topics including covid-19, lockdown, vaccination, mekedatu, viral news, trending news, MK Stalin, DMK, AIADMK, AMMK, Vanathi Srinivasan, Kamal Hassan, TTV Dhinakaran and other political party live news updates in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X