குடியரசு தலைவர் தேர்தல்! கொரோனா கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்.
நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தலைத் தேர்வு செய்ய இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநிலச் சட்டசபை அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தேர்தலில் வாக்களிப்பர். இதற்காக டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிகள் அங்கு வாக்களிக்க உள்ளனர். இதற்காக அனைத்து எம்பிகளும் டெல்லி சென்று உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார்
அதேபோல தமிழ்நாடு சட்டசபை அலுவலகத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்று முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார். முதல்வர் ஸ்டாலின் முதல் நபராகச் சென்னையில் வாக்களித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வாக்குப் பெட்டியில் முதல்வர் ஸ்டாலின் தனது வாக்கைச் செலுத்தினார்.

மருத்துவமனையில் இருந்து நேரடியாக
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர், நேரடியாகத் தலைமைச் செயலகம் சென்று அங்குக் குடியரசுத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் வாக்களித்தார்.

வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் முர்முவிற்கு ஆதரவளித்துள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெல்வது கிட்டதட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்தத் தேர்தலில் வாக்களித்தார். அவர் அதிமுக மூத்த நிர்வாகிகள் உடன் வந்து வாக்களித்தார். பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கும் திரெளபதி முர்முவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் முர்முவிற்கு ஆதரவளித்துள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெல்வது கிட்டதட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் காலையில் அவர் வாக்களிக்க வரவில்லை. மாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கும் நேரத்தில், ஓ. பன்னீர்செல்வம் முழு கவச உடையில் வந்து தனது வாக்கைச் செலுத்தினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications