வீட்டுக்கே உணவு வரும்.. தொழிலாளர்களுக்கு கூடுதல் நிதி உதவி.. அரிசி, பருப்பு இலவசம்: எடப்பாடி அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருமையான பல அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அந்த அறிவிப்புகளின், அனைத்து முக்கிய அம்சங்களை இங்கே பாருங்கள்:

- நேற்று 23ம் தேதி, தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். மேலும் அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இவைகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
- இதனால் விவசாய கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை எளியவர்கள் பாதிப்பை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க 3,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்க ஆணையிடுகிறேன்
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்
- பொது வினியோக கடையில் கூட்டத்தை குறைக்க, டோக்கன் வழங்கி ஒரு குறிப்பிட்ட நேரம், நாள் கணக்கிட்டு பொருட்கள் வழங்கப்படும்
- குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறி இருந்தால் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்
- கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கு சிறப்பு தொகுப்பாக தலா ஆயிரம் ரூபாயும், மற்றும் 17 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்
- தற்போது தமிழகத்தில் சிக்கி தவிக்கும் பிற மாநில கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், கலெக்டர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் குடும்பமும் பலன் பெற, தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்
- அம்மா உணவகங்கள் மூலமாக சூடான, சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும்
- எந்த வசதியும் இல்லாத, ஆதரவற்றோர் போன்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு, சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும். இதற்கென தேவைக்கு ஏற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க சென்னை மாநகர ஆணையர் மற்றும் பிற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்
- அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோருக்கு தேவையான உணவு அளிக்க, மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கான ஊதியம் சிறப்பு ஊதியம் கூடுதலாக வழங்கப்படும்.
இவைதான் முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications