முதல்வர் ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் விழா.. தமிழ்நாடு முழுக்க திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுக்க திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் இன்று. 1953 மார்ச் 1ம் தேதி மு. க ஸ்டாலின் பிறந்தார். இந்த நிலையில் முதல்வராக முதல்முறை ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழ்நாடு முழுக்க உள்ள திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் முதலில் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகிறார்கள்.

பிறந்த நாள் விழா
தமிழ்நாட்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சமீபத்தில்தான் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அந்த வெற்றியை தொடங்கி முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாடு முழுக்க இதற்காக பெரிய விழாக்கள், கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உதவிகள்
மாவட்ட அளவில் நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள், அன்னதான கூட்டங்கள், வீடு வீடாக சென்று ஸ்வீட் வழங்குவது, மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது போன்ற நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக திமுகவினர் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மாவட்டங்களில் இன்று வேட்டி, சட்டை , புடவை வழங்கும் விழாக்களும் நடத்தப்பட உள்ளது.

மக்களுக்கு நல்லதிட்டங்கள்
அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்குவது, ஏழை, எளிய மக்களுக்கு நிதி உதவி செய்வது போன்ற திட்டங்களையும் இன்று செயல்படுத்த உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் நேற்று அவர் தனது சுயசரிதை புத்தகத்தின் பாகம் 1 ஐ வெளியிட்டார். இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், உங்களுக்கு என் பிறந்தநாள் பரிசாக, 'உங்களில் ஒருவன்' என்கிற என் வரலாற்று புத்தகத்தின்முதல் பாகத்தை வெளியிடுகிறேன். நான் பிறந்த 1953ம் ஆண்டு முதல் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 1976ம் ஆண்டு வரையிலான, 23 ஆண்டு கால வாழ்க்கையை அதில் பதிவு செய்திருக்கிறேன்.

கடிதம்
பிறந்த நாள் சந்திப்பு எனக்கு, என் பயணத்தை இன்னும் சிறப்பாகவும், வேகமாகவும், தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் உரமாக அமைக்க உதவும். சமூக நீதி பயணத்தில் தமிழகத்தை கடந்து, நாடு முழுதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதல் கட்ட முயற்சியாகவே, அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு துவக்கப்பட்டு உள்ளது, என்று குறிப்பிட்டு இருந்தார். நேற்று நடந்த இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்
பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். எப்போதும் பிறந்த நாள் அன்று முதல்வர் ஸ்டாலின் இங்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதையை செலுத்தினார். அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முதல்வருடன் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications