Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொய்த்து போன மழை.. சம்பா மகசூல் பாதிப்புக்கு ரூ. 560 கோடி இழப்பீடு அறிவிப்பு.. யாருக்கு கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்தாண்டு பருவமழை போதியளவில் பெய்யாததால் சம்பா மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், இதற்கு இழப்பீடு அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

கடந்தாண்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடந்தாண்டு போதியளவில் பருவமழை பெய்யவில்லை. மழையை நம்பி சம்பா பதிவிட்டு விவசாயிகளுக்கு இதனால் மிகப் பெரிய ஏமாற்றமே கிடைத்து. இதனால் சம்பா மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

 Tamilnadu CM Stalin announced compensation for samba yield affected areas

சம்பா மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், இதற்கு இழப்பீடு வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே இந்த கோரிக்கையை ஏற்று இப்போது பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட இருக்கிறது.

இயற்கை இடர்பாடுகள்: இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டில் இத்திட்டம் 37 மாவட்டங்கள் அடங்கிய 14 தொகுப்புகளில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோ-டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்.டி.எப்.சி எர்கோ மற்றும் ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிரில், 11.20 இலட்சம் விவசாயிகளால் 24.45 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது. மொத்த காப்பீட்டுக் கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,375 கோடியும் ஒன்றிய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.824 கோடியும் விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும் ஆக மொத்தம் ரூ.2.319 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இழப்பீடு: 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அடையப்பட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாகப் பெய்த காரணத்தால் இராமநாதபுரம், சிவகங்கை. புதுக்கோட்டை. தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மிதமான வறட்சியால் 352.797 ஏக்கம் பரப்பளவில் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.181.40 கோடி தொகையைத் தமிழ்நாடு அரசு 1.87.275 விவசாயிகளுக்கு 4.9.2023 அன்று வழங்கியுள்ளது.

பயிர் காப்பீட்டுத் திட்டம்: இதனைத் தொடர்ந்து தற்போது பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்;1 அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில், வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சுமார் ஏழு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட மகசூல் இழப்பிற்கு, திட்ட விதிமுறைகளின்படி பாதிப்படைந்த பகுதிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 560 கோடி ரூபாய் சுமார் 6 இலட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+