நள்ளிரவு 12.30 மணி வரை அலுவல் பணிகள்.. அதிகாலை 5 மணிக்கெல்லாம் விழிப்பு.. ஓய்வின்றி ஓடும் முதல்வர்.!
சென்னை: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல், ஸ்டாலின் தனது தூக்கத்தின் நேரத்தை குறைத்து ஓய்வின்றி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
Recommended Video
கொரோனா தடுப்பு பணிகளில் இதுவரை கவனம் செலுத்தி வந்த அவர் இப்போது பட்ஜெட் கூட்டத் தொடர் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

துறை வாரியான ஆய்வுக்கூட்டங்கள், பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான அதிரடி மெகா அறிவிப்புகள் தொடர்பாக நாள்தோறும் நீண்ட நேரம் ஆலோசித்து வருகிறார்.
இதனால் தினமும் முதலமைச்சர் தூங்குவதற்கு நள்ளிரவு 12.30 மணி முதல் 1 மணி வரை கூட ஆகிவிடுகிறதாம். இதேபோல் நான்கரை மணி நேரத்தில் மீண்டும் துயிலெழுந்து அதிகாலை 5 மணிக்கெல்லாம் அன்றாட பணிகளை கவனிக்கத் தொடங்கிவிடுகிறார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் சரி யாரிடமும் பேச வேண்டும் என நினைத்தால் அதிகாலையில் தான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இப்போது அவரை போல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்றாலும் கூட, தனது எண்ணவோட்டம் முழுவதையும் அரசு நிர்வாகத்தின் மீது தான் ஸ்டாலின் கொண்டிருக்கிறார்.
இன்னும் ஓரிரு வாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால், துறைவாரியாக முதலமைச்சரே நேரடியாக கவனம் செலுத்தி பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கிறார். முதலமைச்சரின் இந்த அசுரத் தனமான உழைப்புக்கும், வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிலரே திக்கு முக்காடுகின்றனர்.
அமைச்சர் பதவி கிடைத்தால் உள்ளூர்களிலும், அந்தந்த மாவட்டங்களிலும் பந்தாவாக பவனி வரலாம் என நினைத்த பலரும் தலைமைச் செயலகத்தில் உள்ள தங்கள் அறைகளில் அமர்ந்து பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருவதை போன்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு தயாராகி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications