விரைவில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம்! பரிந்துரை தர வல்லுநர்களை கொண்ட குழு அமைப்பு
சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களும் மனித சமூகத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி தமிழ்நாட்டில் தலைவலியை ஏற்படுத்துகிறது.
முதலில் வெறும் பொழுது போக்கிற்காக இலவசமாக விளையாடத் தொடங்கும் பலரும், ஒரு கட்டத்தில் பணத்தை வைத்து விளையாடத் தொடங்குகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இப்படி தான் சென்னை மணலியைச் சேர்ந்த பவானி என்பவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானர். 29 வயதான பவானிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த விளையாட்டில் இதுவரை அவர் 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி பாவனி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயக்குமார், போலீஸ் கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு அடுத்த இரு வாரங்களில் தங்கள் பரிந்துரையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications