Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கருணாநிதிக்கு முன்பே.. என்னை தலைவராக அடையாளம் காட்டியவர் க.அன்பழகன்.." முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், க. அன்பழகன் குறித்து நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

திமுக பொதுச்செயலாளராக இருந்தவர் மறைந்த பேராசிரியர் க. அன்பழகன். இவரது நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்,

முதல்வர் ஸ்டாலின்,

இதில் இறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தன்னை திமுக முதலில் முன்மொழிந்தவரே க. அன்பழகன் தான் என்றார். மேலும், குறித்து நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பேராசிரய் அன்பழகன் எப்போதும் தன்னை பற்றிச் சொல்லும் போது முதலில் நான் மனிதன். இரண்டாவது நான் க.அன்பழகன்.. 3ஆவது நான் சுயமரியாதைக்காரன். 4ஆவது நான் அண்ணாவின் தம்பி.. 5ஆவது நான் கருணாநிதியின் தோழன் என்று கூறியே கடைசி வரை வாழ்ந்தவர் பேராசிரியர் அன்பழகன்.. 6ஆவதாக நான் இப்போது நான் உரிமையுடன் கூறுகிறேன் அவர் எனது பெரியப்பா..

ஆளுமைகள்

ஆளுமைகள்

அன்பழகனைக் கருணாநிதியை ஒரு அண்ணனாகவே நினைத்து வந்தார்.. நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்திற்குப் பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளோம். தமிழ்நாடு முழுக்க அன்பழகன் நூற்றாண்டு நினைவுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இறுதிவரை கருணாநிதிக்கு உற்ற நண்பராகவே அன்பழகன் இருந்தார். அரசியல் வரலாற்றில் இரு ஆளுமைகள்- கருணாநிதி, க. அன்பழகன் என் நட்புடன் இருப்பதைக் காண்பது அரிது.. இவருக்கும் இடையே அந்தளவுக்கு நம்பிக்கையும் இருந்தது.

முதலில் சொன்னவர்

முதலில் சொன்னவர்

இந்த இயக்கத்தைக் கருணாநிதிக்குப் பிறகுச் சரியாக வழிநடத்தக்கூடியவர் ஸ்டாலின் தான் என்றவர் அன்பழகன்.. அதுவும் கருணாநிதிக்கு முன்பாகவே சொன்னவர் அன்பழகன். எனது அரசியல் வாழ்க்கையே அவரிடம் இருந்து தான் தொடங்கியது. 13 வயதில் பள்ளி மாணவராக இருந்த போது கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை நான் தொடங்கினேன். அதற்குத் தனியாக அலுவலகம் வேண்டும் என்று கோபாலபுரம் வீதியில் அலுவலகத்தைத் தொடங்கினேன். அதைத் திறந்த வைத்தவரே அன்பழகன் தான்.

பாராட்டினார்

பாராட்டினார்

அவர் கொடுத்த உற்சாகத்தால் தான் இப்போது அண்ணா அறிவாலயத்தையே கட்டிக் காத்து வருகிறேன். அதேபோல இளைஞரணிக்கு அன்பகம் கிடைக்கக் காரணமாக இருந்தவரும் அன்பழகன் தான். அன்பகம் யாருக்கு எனப் பேச்சு எழுந்த போது, 5 மாதத்தில் கட்சிக்கு 11 லட்ச ரூபாய் கொடுத்து அன்பகத்தை இளைஞரணிக்குப் பெற்றுத் தந்தேன். திமுகவுக்கு ஸ்டாலினைப் போல 100 பேர் வர வேண்டும் என மேடையிலேயே பாராட்டியவர். இந்த அளவுக்கு நான் உயர்ந்ததற்குக் காரணமே பேராசிரியர் அன்பழகன் தான்..

வாரிசு விவகாரம்

வாரிசு விவகாரம்

திமுகவின் செயல் தலைவராகவும் சரி, திமுக தலைவராகவும் சரி என்னை முன்மொழிந்தவர் பேராசிரியர்.. வாரிசு என்ற குற்றச்சாட்டைச் சிலர் சுமத்திய போது கல்வெட்டு போலப் பாராட்டியவர் அன்பழகன்.. கருணாநிதிக்கு மட்டுமில்லை எனக்கும் ஸ்டாலின் தான் வாரிசு என்றார் கருணாநிதியின் ஆற்றல் ஸ்டாலினின் செயலில் தெரிகிறது என 40 ஆண்டுகளுக்கு முன்பே பாராட்டியவர்.. திராவிட மாடல் ஆட்சியின் வலிமையைக் கருணாநிதி, அன்பழகன் ஆகியோரிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டேன்..

தன்மானம், சுயமரியாதை, இனமானம்

தன்மானம், சுயமரியாதை, இனமானம்

அவர் உடல் நலமில்லாமல் இருந்த போது அவரை பார்க்கச் செல்வேன். அப்போது நான் நல்லா தான் இருக்கிறேன்.. வேலை அதிகமா இருக்கும்போது என்னை ஏன் பார்க்க வருகிறாய் என்பார்.. அவரது அந்த பொன் சிரிப்பு முகம் இன்னும் எனது நெஞ்சில் இருக்கிறது.. எப்போதும் பேராசிரியருக்கு இனை பேராசிரியர் தான்.. அவரது பேச்சு, புத்தகங்கள், கட்டுரைகளைப் படித்தால் தெரியும். அவை அனைத்தும் தன்மானம், சுயமரியாதை, இனமானம் குறித்தே இருந்துள்ளது.

திராவிட பாசறை கூட்டங்கள்

திராவிட பாசறை கூட்டங்கள்

வாழ்ந்தால் மக்களுக்காக வாழ்வேன்.. தாழ்ந்துபோன தமிழன் தலைநிமிர வாழ்வேன். உரிமை இழந்த இனம் உரிமை பெற வாழ்வேன் என உறுதி எடுத்து வாழ்ந்தவர் ஸ்டாலின். அவரது வழியில் நடைபோட நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ், தமிழ்நாடு திருக்குறள் இருக்கும் வரை அன்பழகனின் புகழ் நிலைத்து நிற்கும் திராவிட பாசறை கூட்டங்கள் ஒன்றியங்கள் பகுதி வாரியாக நடத்தப்பட வேண்டும்.. 234 தொகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+