சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மன்னராட்சியிலும் மக்களாட்சியிலும்.. கோயில் என்பது மக்களுக்கானது!" அழுத்தமாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: மருந்தீஸ்வரர் கோயில் மண்டபத்தில் அறநிலையத்துறை சார்பில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

தமிழக அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் அறநிலையத்துறை சார்பில் 216 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது.

சென்னை மருந்தீஸ்வரர் கோயில் மண்டபத்தில் 31 ஜோடிகளுக்குத் திருணம் நடைபெற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்.

“அற்புதம்”.. 2024 ராமநவமி! அயோத்தி ராமர் கோயில் சிலை தலையில் சூரிய கதிர்கள் விழும்! சிபிஐஆர் தகவல் “அற்புதம்”.. 2024 ராமநவமி! அயோத்தி ராமர் கோயில் சிலை தலையில் சூரிய கதிர்கள் விழும்! சிபிஐஆர் தகவல்

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த ஜோடிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் கேஸ் அடுப்பு, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இணையர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "நேற்றிரவு தான் கோவையில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பினேன். அந்த களைப்புகள் எல்லாம் போகவே இங்கு வந்தேன்.. நான் ஏற்கனவே பல கூட்டங்களில் சொன்னது போல அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாகவே செயல்பட்டு வருகிறார்.

 சேகர்பாபு

சேகர்பாபு

நான் சொல்வதைக் கேட்டு மற்ற அமைச்சர்கள் கோபித்துக் கொள்வார்கள். பொதுவாக முதலமைச்சர் தான் அமைச்சர்களிடம் வேலைவாங்குவார்.. ஆனால், அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து என்னிடம் வேலை வழங்குவர்.. வேலை வாங்குவார் என்றால் தேவையில்லாத வேலை இல்லை.. நாட்டு மக்களுக்குப் பயன் தரக்கூடிய வேலைகள் தான். வெறும் 1.5 ஆண்டுகளில் அறநிலையத்துறையில் அவர் பல திட்டங்களை, பல சாதனைகளைப் படைத்து வருகிறார். அறநிலையத்துறை சார்பில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா உச்சத்தில் இருந்த போது இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது.

 அறநிலையத்துறை சாதனைகள்

அறநிலையத்துறை சாதனைகள்

அறநிலையத்துறை கோயிலில் 47 கோயில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை உரிமை மீட்கப்பட்டுள்ளது. மேலும், இதைப் பல கோயில்களில் இதை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். கோயில் பொதுச் சொத்து விவரங்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளோம். ரூபாய் 3,700 கோடி மதிப்பிலான பொதுக்கேயில் ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.. பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பதைச் செயல்படுத்தியுள்ளோம்.. இதுபோன்ற சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் இதைத் தடுக்க முயன்றாலும் அதை எதிர்த்தும் வழக்கு நடத்தி வருகிறோம்..

 மதத்தை வைத்து அரசியல்

மதத்தை வைத்து அரசியல்

1.5 ஆண்டுகளில் இத்தனை சாதனைகளைப் படைத்துள்ளோம். இதன் காரணமாகவே அவரை செயல்பாபு என்கிறோம்.. இந்த அரசு குறித்து சிலர் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். அவர்களுக்கு அரசியல் செய்யவும், குறைகளைச் சொல்லவும் வேறு எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே மதத்தை வைத்து அவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குறை சொல்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் தாண்டி மக்களுக்கு நலத்திட்டங்களைச் செய்து வருகிறோம்.

 கோயில் என்பது மக்கள் சொத்து

கோயில் என்பது மக்கள் சொத்து

இன்று மட்டும் தமிழ்நாடு முழுக்க 217 பேருக்குத் திருமணம் நடைபெறுகிறது. மன்னராட்சி ஆனாலும் சரி, மக்களாட்சியாலும் சரி கோயில் என்பது மக்கள் சொத்து தான். எந்தவொரு தனிப்பட்ட நபரின் சொத்தும் இல்லை.. இதை நிலைநாட்டவே நீதிக்கட்சி காலத்தில் அறநிலையத்துறை கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அதிக கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டது கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான்.. ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியவர், பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் எனப் பல திட்டங்களைச் சொல்லலாம். இப்போதும் கூட திராவிட மாடல் அரசில் கோயில் சீரமைப்பில் இதுவரை இல்லாத வகையில் செயல்படுத்துகிறோம்.

 அனைவருக்குமான ஆட்சி

அனைவருக்குமான ஆட்சி

அமைச்சர் சேகர்பாபு ஒவ்வொரு கோயிலுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்துகிறார்.. விமானத்தில் போனால் கூட இந்தளவுக்கு வேகமாகச் செல்ல முடியாது.. அந்தளவுக்கு வேகமாகச் செல்கிறார்.. இது அனைவருக்குமான அரசாகச் செயல்பட்டு வருகிறது. இதை நன்கு உணர்ந்ததால் தான் 5 முறை கருணாநிதியிடமும் 6ஆவது முறை தமிழக ஆட்சியை அவரது மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.. ஆட்சிய அமைத்த போது செய்தியாளர்களிடம் நான் சொன்னேன், இது வாக்களித்தவர்களுக்கு மட்டுமான ஆட்சியாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும்.. வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் வாக்களிக்காதவர்கள் இப்படியொரு ஆட்சிக்கு வாக்களிக்கத் தவறிவிட்டுமே என வருத்தப்படுவார்கள்.

 இல்லற வாழ்க்கை

இல்லற வாழ்க்கை

மணமக்கள் 2 குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்பட்டு வருகிறது. முன்பு நாம் இருவர் நமக்கு மூவர்,, அது பின் முன்பு நாம் இருவர் நமக்கு இருவர் ஆச்சு.. இப்போது முன்பு நாம் இருவர் ஒருவர். இது மேலும் பின்னாளில் முன்பு நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று கூட மாறலாம். குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். இல்லற வாழ்க்கையில் சமத்துவத்தை கடைப்பிடியுங்கள். இதை நான் முதல்வராக இல்லாமல் உங்கள் தந்தையாகவே கூறுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Tamilnadu CM Stalin says Annai Tamizhil Archanai scheme will be implemented across tamilnadu: Tamilnadu CM Stalin latest speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X