தமிழ்நாடு அரசியலின் தற்குறி சீமான்.. நல்ல காமெடி நடிகராக மாறிவிட்டார்.. செல்வப்பெருந்தகை கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலின் தற்குறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் சிறந்த நகைச்சுவை நடிகராக சீமான் மாறிவிட்டதாக கூறிய செல்வப்பெருந்தகை, ஓய்வறியா உழைப்பை அளித்தவர் பெரியார் என்றும் தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த போது சீமான், உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது தான் பெண் உரிமையா? என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

seeman periyar selvaperunthagai

இதனைத் தொடர்ந்து பெரியாரிய ஆதரவாளர்கள் சீமானுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தபெதிக இயக்கம் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் பெரியார் அப்படி பேசியதற்கான ஆதாரத்தை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதேபோல் சீமான் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தரப்பில் சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஒய்வறியா உழைப்பை அளித்த பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். தமிழக மக்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்ட சமூகநீதியை பெற்றுத் தருவதற்காக பெரியார் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.

அத்தகைய போராட்டங்களின் விளைவாக பல்வேறு உரிமைகளை பெற்று வாழ்க்கையில் முன்னேறியிருப்பதைறியும் தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள். அரசியலில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் மலிவான, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி ஊடக வெளிச்சம் பெற்று வருகிற சீமானை, தமிழக மக்கள் என்றைக்குமே எற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நடைமுறை சாத்தியமே இல்லாத கருத்துகளை கூறி, இளைஞர்களை தவறாக வழிநடத்துகிற சீமானின் அரசியலுக்கு முடிவுகட்டுகிற காலம் நெருங்கி விட்டது. எத்தனை தேர்தலில் அவர் போட்டியிட்டாலும் ஒரே ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் தோற்பதற்காகவே இந்தியாவில் ஒரு கட்சியை யார் நடத்துகிறார்கள் என்று தேடிப் பார்த்தால் அனு சீமான் நடத்துகிற கட்சியாகத் தான் இருக்க முடியும். வாய்க்கு வந்தபடி அவர் உளறுவதை ஊடகவெளிச்சம் போட்டு காட்டுவதனாலேயே தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார்.

இதன்மூலம், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகராக சீமான் மாறிவிட்டார். அவரை யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வந்தாலும் பெரியாரின் புகழை ஒரு துளியளவு கூட இவர் போன்றவர்களால் சிதைக்க முடியாது. எனவே, சீமானின் அருவருக்கத்தக்க பேச்சை தமிழக மக்கள் கடந்த காலங்களைப் போல, தொடர்ந்து நிராகரிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+