மெல்ல குறையும் கொரோனா! தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 16,000க்கும் கீழ் சரிவு! உயிரிழப்புகளும் இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நட்டில் ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இதனிடையே வைரஸ் பாதிப்பு மீண்டும் சில வாரங்களாக அதிகரித்தது.
தமிழகத்தில் 100க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு சில நாட்கள் இடைவெளியில் 2000ஐ தாண்டியது. இதனால் மீண்டும் ஊரடங்கு குறித்த அச்சம் மக்களுக்கு வந்தது.

தினசரி பாதிப்பு
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,011 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து திரும்பிய தலா ஒருவர் உட்பட மாநிலத்தில் மொத்தம் 2,014 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 35,30,398ஆக அதிகரித்து உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று மாநிலத்தில் 16,153ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 15,843ஆக குறைந்து உள்ளது. அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 5213 பேரும் செங்கல்பட்டில் 1948 பேரும் கோவையில் 1220 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மூன்று மாவட்டங்களைத் தவிர வேறு எங்கும் ஆக்டிவ் கேஸ்கள் ஆயிரத்தைத் தாண்டவில்லை.

ஒருவர் உயிரிழப்பு
மேலும், இன்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2324 பேர் குணமடைந்து உள்ளனர். இதன் மூலம் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,76,523ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தினசரி கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில், இன்று மாநிலத்தில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியாகவில்லை. இதுவரை தமிழ்நாட்டில் 38,032 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், ஒப்பிட்டளவில் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. தலைகர் சென்னையில் இன்று 431 பேருக்கு கொரோனா பதிவாகி உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 212 பேருக்கும் கோவையில் 178 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. அதேபோல விருதுநகரில் 118 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதம் 5.7%ஆக உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் பாசிட்டிவ் விகிதம் 12.3%ஆக உள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications