படுவேகமாக அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் 300ஐ தாண்டிய தினசரி பாதிப்பு.. வேகமாக பரவுவது ஏன்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று முறை கொரோனா அலைகள் ஏற்பட்டுள்ளன. வேக்சின், தடுப்பு பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்து கட்டுக்குள் வந்தது.

கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே பதிவாகி வந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு: இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனையையும் இன்று நடத்தினார். இதில் பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று தினசரி வைரஸ் பாதிப்பு 273ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் அது 300ஐ கடந்துள்ளது.

159 ஆண்கள் மற்றும் 144 பெண்கள் என்று இன்று மாநிலம் முழுக்க மொத்தம் 303 பேருக்குத் தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 101 பேருக்கும், செங்கல்பட்டில் 29 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல கன்னியாகுமரியில் 26 பேருக்கும், கோவையில் 22 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்: பிரிட்டனில் இருந்து வந்த 3 பேருக்கும், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு குறைவாக ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது நல்ல ஒரு செய்தியாகும். அதேபோல அதேபோல மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 1500 தாண்டி 1530ஆக இப்போது உள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அதேபோல இன்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், புதிய ஓமிக்ரான் கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறியிருந்தார். அதேநேரம் இது முந்தைய வேரியண்ட்கள் அளவுக்கு வேகமாகப் பரவுவதில்லை என்பது ஒரு நல்ல செய்தியாகும்.
மாஸ்க்: இந்திய அளவில் கொரோனா பாதிப்பு படுவேகமாகவே அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடு முழுக்க மாஸ்க் அணிவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதில் மாஸ்குகளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கவே செய்கிறது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications