4.32 லட்சம் பேரா!!.. கொரோனா வேக்சின் போடுவதில்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை.. எப்படி சாத்தியமானது?
சென்னை; தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 4.32 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேக்சின் போடுவதில் நேற்று புதிய சாதனை படைத்துள்ளது.
Recommended Video
நாடு முழுக்க வேக்சின் வழங்குவதை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. 18+ வயது கொண்ட எல்லோருக்கும் இலவசமாக மத்திய அரசு வேக்சின் வழங்குகிறது. மத்திய அரசு அளிக்கும் இந்த வேக்சினை மாநில அரசுகள் மக்களுக்கு அளிக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் இவ்வளவு என்று மத்திய அரசு தினமும் வேக்சின் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 2-4 லட்சம் வேக்சின் புனேவில் இருந்து டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

எப்படி
தமிழ்நாட்டிற்கு தினசரி வழங்கப்படும் வேக்சின் உடனுக்குடன் மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் வேக்சின் மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கப்படுகிறது. சென்னை, கோவை மாவட்டங்களுக்கு அதிக அளவு வேக்சினும், மற்ற மாவட்டங்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் வேக்சினும் வழங்கப்படுகிறது.

மாவட்ட
இதற்காக மாவட்டங்களில் சிறு சிறு அளவில் கேம்ப்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு எளிதாக வேக்சின் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மக்களும் தற்போது வேக்சின் போட ஆர்வம் காட்டி வருவதால், வேக்சின் போடப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகாலையிலேயே மக்கள் ஆர்வமாக வேக்சின் போட பல்வேறு மாவட்டங்களில் வரிசையில் நிற்கும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன.

எவ்வளவு
மக்கள் ஆர்வமாக இருப்பதாலும், பல உள்ளூர் கேம்ப்கள் அமைக்கப்பட்டு இருப்பதாலும் வேக்சின் போடுவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 4,32,044 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் மிக அதிக நபர்களுக்கு போடப்பட்ட வேக்சின் ரெக்கார்ட் இதுதான். இதற்கு முன் தினசரி வேக்சின் 4 லட்சத்தை தாண்டாத நிலையில் நேற்று 4.32 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

எவ்வளவு
இதுவரை தமிழ்நாட்டில் 1,32,59,228 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 18+ வயது கொண்டவர்களில் 20.2% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. 45 + வயது கொண்டவர்களில் 25.1% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. 60+ வயது கொண்டவர்களில் 23.4 % பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. 4.1% பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications