சூப்பர் செய்தி..!இன்று 2652 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று..20 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2,652 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று ஒருவர்கூட கொரோனாவால் உயிரிழக்காத நிலையில், இன்று 6 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால், கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதலே வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் மெல்லக் குறைந்து வருகிறது.
அதன்படி இன்றும் தொடர்ந்து 52ஆவது நாளாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது,

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட 2652 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 131 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும்

கொரோனா உயிரிழப்புகள்
இன்று மாநிலம் முழுவதும் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 7 பேர் எவ்வித இணை நோய் இல்லாதவர்கள், 9 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் ஆகும். மேலும், இன்று உயிரிழந்தவர்களில் 24 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 33454 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தனிமையில் உள்ளவர்கள் உட்பட மொத்தம் 31,819 கொரோனா நோயாளிகள் தற்போது மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 3,104 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 24,56,165 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
இன்று அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்தில் இன்று 290 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோட்டில் 193 பேருக்கும் தஞ்சையில் 191 பேருக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு (139), சேலம் (170), திருப்பூர் (157), திருச்சி (103) ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.

தலைநகர் சென்னை
தலைநகர் சென்னையில் 165 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தலைநகர் சென்னையில் சுமார் 130 நாட்களுக்குப் பிறகு கொரோனா உயிரிழப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால், இன்று ஆறு பேர் தலைநகரில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கோவை, மதுரை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications