சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில்.. தினசரி கொரோனா கேஸ்கள் குறைந்தாலும்.. விடாமல் உயரும் பலி எண்ணிக்கை.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தாலும், இன்னும் கொரோனா மரணங்கள் குறையவில்லை. தொடர்ந்து கொரோனா மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் நேற்று 34285 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 306652 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 1911496 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களை விட இது கொஞ்சம் குறைவாகும். கொரோனா கிராப் லேசாக சரிகிறது என்பதை இது உறுதி செய்கிறது.

கிராப்

கிராப்

முக்கியமாக சென்னை தினசரி கொரோனா கேஸ்கள் 4100க்கும் கீழ் சென்றுள்ளது. செங்கல்பட்டில் தினசரி பாதிப்பு 2000க்கு கீழும், கோவையில் 4000 கீழும் பதிவாக தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் தினசரி பாதிப்புகள் குறையும் நிலையில் டிஸ்சார்க் ஆகும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் நேற்று 28745 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 1583504 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. தமிழகத்தில் தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து 450க்கும் அதிகமாக பதிவாகிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா காரணமாக 468 பேர் பலியாகி உள்ளனர்.

தினசரி கேஸ்கள்

தினசரி கேஸ்கள்

இதுவரை 21340 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தினசரி கேஸ்கள் குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை மட்டும் குறைவது இல்லை. சென்னையில் நேற்று 4041 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. அதோடு 88 பேர் அங்கு நேற்று பலியானார்கள். 47553 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

மாவட்ட வாரியாக

மாவட்ட வாரியாக

இன்னொரு பக்கம் கோவையில் நிலைமை மோசமாகி வருகிறது. கோவையில் 3632 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது. கோவையில் 24 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. 34253 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் 1495 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 36 பேர் நேற்று யாகி பலியாகி உள்ளனர். 16630 பேர் செங்கல்பட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

உயர்கிறது

உயர்கிறது

திருவள்ளூரில் 1425 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 36 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. 13041 பேர் திருவள்ளூரில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். நீலகிரி, பேரமபலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் யாரும் நேற்று பலியாகவில்லை. 134 பேர் நேற்று எந்த வித கூடுதல் நோயும் இல்லாமல் பலியாகி உள்ளனர். 334 பேருக்கு சர்க்கரை வியாதி உட்பட பல கூடுதல் நோய்கள் இருந்துள்ளன.

காரணம்

காரணம்

கடந்த வாரங்களில் தமிழகத்தில் நிறைய பேர் தீவிரமாக கொரோனாவோடு அனுமதிக்கப்பட்டனர். அவர்களால் தற்போது பலி எண்ணிக்கை உயர்கிறது. தற்போது கேஸ்கள் குறைவதால் தினசரி மரணங்கள் போக போக குறையும் என்கிறார்கள். கடந்த வாரங்களில் பலர் பாதிக்கப்பட்ட காரணத்தால், தற்போது பலி எண்ணிக்கை தினமும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

English summary
Tamilnadu: Daily death are increaing even though Covid 18 new cases are going down. Last week cases are the reason for high number deaths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X